சுக்கிரன் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு அசத்தல் அதிர்ஷ்டம், மகிழ்ச்சி பொங்கும்

Shukra Gochar 2023: சுக்கிரன் மேஷ ராசிக்கு மாறும்போது சில ராசிக்காரர்களுக்கு நன்மையும், சில ராசிக்காரர்களுக்கு பாதகமும் ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 4, 2023, 05:06 PM IST
  • சுக்கிரனின் பெயர்ச்சி மேஷ ராசியில் நடக்கிறது.
  • இந்த ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும்.
  • குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
சுக்கிரன் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு அசத்தல் அதிர்ஷ்டம், மகிழ்ச்சி பொங்கும் title=

சுக்கிரன் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தில், சுக்கிரன் ஆடம்பரம், வசதிகள் மற்றும் செழுமைக்கான காரணியாகக் கருதப்படுகிறது. ஜாதகத்தில் சுக்கிரன் சுபமாக இருந்தால் உலக இன்பங்கள் அனைத்தும் கைகூடும். சுக்கிரன் பலவீனமாகவோ அல்லது அசுபமாகவோ இருந்தால், அந்த நபர் மகிழ்ச்சியை இழக்கிறார். பொதுவாக அனைத்து கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரனின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களைக் கொண்டு வரும். 

ஹோலிக்குப் பிறகு மார்ச் 12 ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். சுக்கிரனின் சஞ்சாரம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும் என்பது உறுதி. மார்ச் 12ம் தேதி காலை 8.13 மணிக்கு சுக்கிரன் பெயர்ச்சி அடைகிறார்.

பிப்ரவரி 15-ம் தேதி மீன ராசியில் சுக்கிரன் பெயர்ந்தார். ராகு ஏற்கனவே மேஷ ராசியில் இருக்கிறார். ஹோலிக்குப் பிறகு சுக்கிரன் மேஷ ராசிக்கு மாறும்போது சில ராசிக்காரர்களுக்கு நன்மையும், சில ராசிக்காரர்களுக்கு பாதகமும் ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

மேஷம்

சுக்கிரனின் பெயர்ச்சி மேஷ ராசியில் நடக்கிறது. இந்த ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆளுமையில் மாற்றம் ஏற்படலாம். காதல் உறவுகளும் மேம்படும். திருமணமானவர்களுக்கு துணைவரிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரத்திலும் லாபம் காணலாம்.

மேலும் படிக்க | 10 நாட்களில் செவ்வாய் பெயர்ச்சி 2023, இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி சுப பலன்களைத் தரும். புதிய நபர்களுடனான உங்கள் தொடர்பு அதிகரிக்கும், இது எதிர்காலத்தில் உங்களுக்கு நன்மை பயக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். இந்தக் காலம் மாணவர்களுக்கு அற்புதமாக இருக்கும். பல வித சுகங்களை முழுமையாக அனுபவிப்பீர்கள். கல்வியில் சிறப்பாக செயல்படுவீர்கள்.

சிம்மம் 

சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரத்தால் இளைய சகோதர சகோதரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும். வேலை தேடுபவர்கள் வெற்றி பெறுவார்கள். மாணவர்களுக்கு இது மிக நல்ல நேரமாக இருக்கும். வெளியூர் பயணத்திற்கான வாய்ப்புகளும் உருவாகும். திருமணமானவர்களுக்குப் சுக்கிரன் பெயர்ச்சி பலன்களைத் தரும். புதிய வேலையைத் தொடங்குபவர்களுக்கு இது நல்ல நேரம்.

தனுசு

சுக்கிரன் மேஷ ராசியில் நுழைவதால் வேலையில் பதவி உயர்வு ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். பல்வேறு வழிகளில் பணம் சம்பாதிப்பதில் வெற்றி கிடைக்கும். இந்த நேரம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். பழைய சண்டை முடிவுக்கு வரும். பொருளாதார நிலையும் வலுவாக இருக்கும். திருமணமானவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி பல ஆசிகளை வழங்கும். கூட்டுத்தொழிலில் வெற்றி உண்டாகும். குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். மக்கள் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். பண விஷயத்தில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கும்பத்தில் உதயமாகும் சனி! நெருக்கடியில் சிக்கும் ‘சில’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

 

Trending News