ஜூலை 24 வரை இந்த ராசிகளுக்கு லட்சுமி தேவியின் சிறப்பு அருள் கிடைக்கும்

Goddess Lakshmi Grace: ஜூலை மாதத்தின் மூன்றாவது வாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அவை எந்த ராசிக்காரர்கள் என்பதை பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 19, 2022, 12:02 PM IST
  • தொழில் முன்னேற்றப் பாதை திறக்கும்
  • வியாபாரம் செய்பவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும்
  • வேலையில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்
ஜூலை 24 வரை இந்த ராசிகளுக்கு லட்சுமி தேவியின் சிறப்பு அருள் கிடைக்கும் title=

18 ஜூலை 2022, திங்கட்கிழமை முதல் புதிய வாரம் தொடங்கியுள்ளது. பல கிரகங்களின் நிலை மாற்றங்கள் இந்த வாரம் 12 ராசிக்காரர்களையும் பாதிக்கும். சில ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் நிலை சிறப்பு பலன் தரும் மற்றும் சில ராசிக்காரர்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும். எனவே ஜூலை 18 முதல் ஜூலை 24 ஆம் தேதி 2022 வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அசுப மற்றும் சுப பலன்களை தரப்போகிறது என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

மேஷம்- மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தொழில் முன்னேற்றப் பாதை திறக்கும். வேலை மாற்றம் அல்லது பதவி உயர்வு சாத்தியமாகும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சூப்பர், 3 ராசிகளுக்கு சுமார் 

ரிஷபம்- ஜூலை 20க்குப் பிறகு, தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். இந்த வாரம் சுற்றுலா செல்லலாம்.

மிதுனம்- மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வரப்பிரசாதம் போன்றது. இந்த வாரம் குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம். பண வரவுக்கான அறிகுறிகள் உள்ளன.

கடகம்- கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலையில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இதன் போது உங்கள் கையில் எந்த வேலையைச் செய்தாலும் வெற்றியை அடைவீர்கள். வியாபாரிகள் வெற்றி பெறுவார்கள்.

சிம்மம்- சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது சிறப்பு. கல்வித்துறையில் தொடர்புடையவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும்.

கன்னி- கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். தடைபட்ட பணம் வரலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

துலாம்- துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலை சம்பந்தமான மன அழுத்தம் ஏற்படலாம். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். சமய நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக இருப்பார்கள்.

விருச்சிகம் - வியாபாரிகள் இந்த வாரம் விரும்பிய லாபத்தைப் பெறலாம். சமயப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிக்கலாம்.

தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு வேலை சம்பந்தமாக மன உளைச்சல் ஏற்படலாம். பணம் சம்பாதிக்கும் பாதை திறக்கும். தேங்கி கிடந்த பணம் திரும்பக் கிடைத்து மனம் மகிழ்ச்சியடையும்.

மகரம்- மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொருளாதார வெற்றி கிடைக்கும். வங்கி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறையில் தொடர்புடையவர்களின் முன்னேற்றம் சாத்தியமாகும்.

கும்பம்- கும்ப ராசிக்காரர்கள் அரசியலில் வெற்றி பெறலாம். புதிய வேலைகளைத் தொடங்குவது நல்லது. தொழில், வியாபாரிகளுக்கு சாதகமாக இருக்கும்.

மீனம் - மீனம் ராசியை சேர்ந்தவர்கள் பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சிகரமான செய்திகள் கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் இந்த வாரம் பணம் சம்பாதிக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: சில ராசிகளுக்கு ஆபத்து, சிலருக்கு ஆதாயம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News