மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

Sevvai Peyarchi Palangal: மேஷ ராசியில் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான மாற்றங்கள் இருக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 8, 2024, 10:50 AM IST
  • மீன ராசியினருக்கு மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும்.
  • இந்த நேரத்தில் செவ்வாய் அருளால் பண வரவு அதிகமாகும்.
  • இதனால் பொருளாதார நிலை மேம்படும்.
மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள் title=

Sevvai Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. ஜோதிட கணக்கீடுகளின் படி, செவ்வாய் குறைந்த இடைவெளியில் தனது ராசியை மாற்றுகிறார். திருமணம், நிலம், வீடு, செல்வம், தைரியம் மற்றும் சாகசத்தின் காரணி கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறார். 

பொதுவாகவே கிரகங்களில் ராசி மாற்றம் மட்டுமின்றி, நட்சத்திர மாற்றம், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்களின் தாக்கங்கள் அனைத்து ராசிகளிலும் இருக்கும். கிரகங்களின் சேனாதிபதியான செவ்வாய் ஜூன் 1 ஆம் தேதி தனது சொந்த ராசியான மேஷ ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.  மீனத்திலிருந்து மேஷ ராசியில் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான மாற்றங்கள் இருக்கும். இவர்களது நிதி நிலை வலுவடையும். பண வரவு அதிகமாகும். ஆரோக்கியம் மேம்படும். செவாய் பெயர்ச்சியால் அதிக்கப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம் (Aries)

செவ்வாய் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களின் உறுதியை அதிகரிக்கும். மன தைரியமும் துணிச்சலும் அதிகமாகும். வியாபாரத்தில் இருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். இந்த நேரத்தில் நிலம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண நிச்சயம் ஆகும். விளையாட்டு, காவல்துறை, மருத்துவம் ஆகிய துறைகளில் இருப்பவர்களுக்கு இந்த காலம் அட்டகாசமாக இருக்கும். இப்போது தொடங்கப்படும் பணிகளால் லாபம் உண்டாகும்.

மேலும் படிக்க | சனியின் மிகப்பெரிய மாற்றம்.. இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்

தனுசு (Sagittarius)

தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி அற்புதமான நற்பலன்களை அளிக்கும். இந்த ராசிக்காரர்கள் வேலையில் முன்னேற்றத்துடன் வெற்றியையும் பெறுவார்கள். குழந்தை பாக்கியம் வேண்டி காத்திருக்கும் பெற்றோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். தேர்வில் மகத்தான வெற்றிகளை பெறுவார்கள். தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிலவும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். நீங்கள் திட்டமிடும் அனைத்து பணிகளும் நன்றாக நிறைவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். இந்த காலத்தில் பண வரவு அதிகமாக இருக்கும்

மீனம் (Pisces)

மீன ராசியினருக்கு மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில் செவ்வாய் அருளால் பண வரவு அதிகமாகும். இதனால் பொருளாதார நிலை மேம்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் ஆளுமை மேம்படும். அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். இந்த நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள். சட்ட சிக்கல்கள் இருந்தால் அவை உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | ரிஷபத்தில் இணையும் சூரியன் குரு... இந்த ராசிகளுக்கு அளவில்லா அதிர்ஷ்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News