ஏழரை நாட்டு சனியின் தாக்கம் பாடாய் படுத்துகிறதா? இந்த பரிகாரங்கள் கை கொடுக்கும்

Remedies for Ezharai Nattu Sani: சனி தோஷத்திற்கு சில பரிகாரங்கள் ஜோதிடர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. இவற்றை செய்வதன் மூலம், ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையால் உண்டாகும் பிரச்சினைகளைக் குறைக்கலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 9, 2022, 05:50 PM IST
  • பொதுவாக, ஆஞ்சனேயரின் பக்தர்களுக்கு சனி பகவான் தொல்லைகளை அளிப்பது இல்லை.
  • சனிக்கிழமையன்று ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யலாம்.
  • சனிக்கிழமையன்று சிவபெருமானை வழிபடுவதுடன், சிவ புராணத்தை படிப்பதும் சனி பகவானின் ஆசீர்வாதத்தை அளிக்கிறது.
ஏழரை நாட்டு சனியின் தாக்கம் பாடாய் படுத்துகிறதா? இந்த பரிகாரங்கள் கை கொடுக்கும் title=

சனி பகவானுக்கான பரிகாரங்கள்: சனி பகவான் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். மனிதர்கள் செய்யும் நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் ஏற்ப அவர் பலன்களைத் தருகிறார். சனி பகவானின் பார்வையில் இருந்து யாரும் தப்புவதில்லை. அவரது அனுகூலமான சுப பார்வை ஒருவர் மீது பட்டால், அந்த நபரின் விதி மாறி அபரிமிதமான பலன்கள் கிடைக்கின்றன. சாதாரண நிலையில் இருந்தாலும், அவர் அரச பதவியை அடைகிறார்.

அதே சமயம் சனி பகவானின் கோபத்திற்கு ஒரு நபர் ஆளானால், ஏழரை நாட்டு சனி, சனி தசை ஆகியவற்றின் தாக்கத்தில் ஒரு நபர் இருந்தால், அவர் வாழ்க்கையில் பல வித பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. சனியின் கோபம் ஒருவரை பாடாய் படுத்திவிடுகிறது.

எவ்வளவு பணக்காரராக இருந்தாலும், எவ்வளவு செல்வாக்கு உள்ளவராக இருந்தாலும், சனி பகவானின் அசுப பார்வை அவரை வீழ்த்தி விடுகிறது. அனைத்து பக்கங்களிலிருந்தும் பிரச்சனைகளால் அவர் சூழப்பட்டிருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சனி பகவானை மகிழ்ச்வித்து, அவரது கோவத்தை தடுக்க சில பரிகாரங்கள் ஜோதிடர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. இவற்றை செய்வதன் மூலம், ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையால் உண்டாகும் பிரச்சினைகளைக் குறைக்கலாம்.

ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யலாம்:

சனிக்கிழமையன்று ஹனுமான் சாலிசாவை பாராயணம் செய்வதன் மூலம் சனி பகவான் மகிழ்ச்சி அடைகிறார். பொதுவாக, ஆஞ்சனேயரின் பக்தர்களுக்கு சனி பகவான் தொல்லைகளை அளிப்பது இல்லை என கூறப்படுகின்றது. இதனால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதோடு, பல வகையான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இதனுடன் சனிக்கிழமையன்று சிவபெருமானை வழிபடுவதுடன், சிவ புராணத்தை படிப்பதும் சனி பகவானின் ஆசீர்வாதத்தை அளிக்கிறது. 

விரதம் இருக்கலாம்

சனிபகவானின் கோபத்தில் இருந்து விடுபடவும், அவருடைய ஆசிகள் உங்கள் மீது இருக்கவும் விரும்பினால், சனிக்கிழமையன்று சனிபகவானுக்கான விரதத்தை கடைபிடியுங்கள். அவ்வாறு செய்வது மிகவும் பலனளிப்பதாக கருதப்படுகிறது. இந்த பரிகாரத்தை சனிக்கிழமையன்று செய்வதால், வாழ்வின் அனைத்து கஷ்டங்களும் நீங்கும்.

மேலும் படிக்க | சூரிய பெயர்ச்சி: அதிர்ஷ்டத்தில் சூரியனைப் போல் பிரகாசிக்கும் ‘சில’ ராசிகள் இவை தான்! 

விளக்கேற்றி வழிபடவும்

சனிக்கிழமையன்று சனி பகவானின் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது வலுவான பலன்களை அளிக்கும். இரும்பு பாத்திரத்தில் நல்லெண்ணெயை விட்டு, அதில் உங்கள் முகத்தைப் பார்க்கவும். பிறகு இந்த எண்ணெயை சனி பகவானின் கோவிலுக்கு தானம் செய்யுங்கள். இதனுடன், கருப்பு நாய்க்கு உணவளிப்பதும் பலன் தரும். 

ஸ்தோத்திரங்கள் 

சனி பகவானின் மந்திரங்களான 'ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரௌண் சஹ சனிச்சராய நம' மற்றும் 'ஓம் சனிஸ்வராய நம' ஆகிய மந்திரங்களை சனிக்கிழமைகளில் உச்சரிக்கவும். இதனுடன், சனிக்கிழமையன்று ஏழைகளுக்கு உங்களால் முடிந்தவற்றை தானம் செய்யுங்கள். இதன் மூலம் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து நெருக்கடியிலிருந்தும் விடுதலை பெறலாம். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுக்கிரன் மாற்றத்தால் உருவாகும் அஷ்டலக்ஷ்மி ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு சுக்கிரதசை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News