Happy Dhanteras 2022 Wishes: உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் அனுப்ப அட்டகாசமான வாழ்த்து செய்திகள்

Happy Dhanteras 2022 Wishes in Tamil: சில இனிமையான வாழ்த்துக்களின் தொகுப்பை உங்களுக்காக இந்த பதிவில் கொடுத்துள்ளோம். இவற்றை அனுப்பி அனைவருடனும் உங்கள் மகிழ்ச்சியையும், அன்பையும் பரிமாறிக்கொள்ளுங்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 22, 2022, 02:36 PM IST
  • தீபாவளிக்கு முன்னர் வரும் தந்தேரஸ் சுப நாளில் தன்வந்திரி பகவான் வணங்கப்படுகிறார்.
  • இந்த நாளில் லட்சுமி தேவியை வழிபடுவது நல்ல அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் தரும்.
  • ஐப்பசி மாதத்தின் தேய் பிறையில் வரும் திரயோதசி தினத்தன்று தந்தேராஸ் கொண்டாடப்படுகிறது.
Happy Dhanteras 2022 Wishes: உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் அனுப்ப அட்டகாசமான வாழ்த்து செய்திகள் title=

Happy Dhanteras 2022 Wishes in Tamil: அன்னை லட்சுமி மற்றும் குபேரரின் பக்தர்கள் தந்தேராஸின் மங்களகரமான திருவிழாவைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் உங்கள் அன்புக்குரியவர்களுடன் இந்த திருவிழாவுக்கான வாழ்த்துகள், செய்திகள், மற்றும் படங்களைப் பகிர்ந்து இந்த நிகழ்வைக் கொண்டாடுங்கள். 

தந்திரயோதசி என்றும் அழைக்கப்படும் தந்தேரஸின் புனிதமான இந்து பண்டிகையானது, அனைவருக்கும் மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும் ஒரு விழா ஆகும். மக்கள் இந்த நிகழ்வை மிகவும் ஆடம்பரமாகக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். தந்தேரஸ் தீபாவளி அல்லது தீபாவளியின் ஐந்து நாள் கொண்டாட்டங்களின் தொடக்கத்தை குறிக்கிறது. இது தீபாவளிக்கு முன்பு கொண்டாடப்படுகிறது. 

தீபாவளிக்கு முன்னர் வரும் தந்தேரஸ் சுப நாளில் தன்வந்திரி பகவான் வணங்கப்படுகிறார். இந்த நாளில் லட்சுமி தேவியை வழிபடுவது நல்ல அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் தரும். ஐப்பசி மாதத்தின் தேய் பிறையில் வரும் திரயோதசி தினத்தன்று தந்தேராஸ் கொண்டாடப்படுகிறது. 

பக்தர்கள் இந்த நாளில் தங்கள் வீடுகளை விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரித்து, தங்கம், வெள்ளி, பித்தளை மற்றும் செம்பு போன்ற மங்களகரமான பொருட்கள், லட்சுமி தேவி மற்றும் விநாயகர் சிலைகள், பித்தளை, தாமிரம் அல்லது வெள்ளிப் பாத்திரங்கள், விளக்குமாறு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், மரச்சாமான்கள் அல்லது ரியல் எஸ்டேட் சொத்துக்கள் ஆகியவற்றை வாங்குகிறார்கள். இந்த நாட்களில் இவற்றை வாங்கினால், இவை செழிப்பையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தருகின்றன.

தந்தேரஸ் திருநாளில் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிமையான வாழ்த்துக்களை அனுப்ப விரும்புகிறீர்களா? ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் சமூக ஊடகங்களில் தந்தேரஸ் வாழ்த்துக்களை பகிர ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால், சில இனிமையான வாழ்த்துக்களின் தொகுப்பை உங்களுக்காக இந்த பதிவில் கொடுத்துள்ளோம். இவற்றை அனுப்பி அனைவருடனும் உங்கள் மகிழ்ச்சியையும், அன்பையும் பரிமாறிக்கொள்ளுங்கள். 

மேலும் படிக்க | தந்தேரஸ் திருநாளில் இந்த 5 பொருட்களை வாங்கினால் வீட்டில் பண மழை பொழியும் 

தந்தேரஸ் 2022: வாழ்த்துக்கள் மற்றும் செய்திகள் 

“உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தந்தேரஸ் வாழ்த்துக்கள்.”

“அன்னை லட்சுமி தனது ஆசீர்வாதங்களை உங்கள் மீது பொழியட்டும். உங்கள் வாழ்க்கையை செழிப்புடனும் மகிழ்ச்சியுடனும் வளப்படுத்தட்டும். உங்களுக்கு சுபமான தந்தேரஸ்!!”

“உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்  மகாலட்சுமியின் சிறந்த ஆசீர்வாதங்கள் கிடைக்க எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள். மேலும் வரும் ஆண்டில் நீங்கள் மேலும் செல்வம் மற்றும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றியுடன் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். தந்தேரஸ் வாழ்த்துக்கள்!!”

“தந்தேராஸ் பண்டிகை உங்கள் இதயத்தையும் வீட்டையும் மகிழ்ச்சியுடன் பிரகாசமாக்கி வெற்றியின் வெளிச்சங்களால் நிரப்பும் என்று நம்புகிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பான வாழ்த்துக்கள். இனிய தந்தேராஸ்!!”

“வரும் ஆண்டில் உங்களுக்கு வெற்றியையும் செல்வத்தையும் வழங்க இறைவன் குபேரர் எப்போதும் உடன் இருப்பார். உங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் மகிழ்ச்சியான தந்தேரஸ் வாழ்த்துக்கள்!!”

“லட்சுமி தேவி எப்போதும் உங்கள் இதயத்திலும் இல்லத்திலும் தங்கி, மகிழ்ச்சியான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ உங்களுக்கு உதவட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தந்தேரஸ் வாழ்த்துக்கள்”

“இனிய தந்தேராஸ் வாழ்த்துக்கள்! அன்னை லட்சுமியும் குபேரரும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் வளமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்த வலிமை மற்றும் வாய்ப்புகளை வழங்கட்டும்.”

“எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு செழுமையையும் செழிப்பையும் தந்து ஆசீர்வதிப்பாராக. இனிய தந்தேரஸ்” 

“இதயங்களில் மகிழ்ச்சி, வீட்டில் செல்வம், மனதில் அமைதி என அனைத்தும் என்றும் நிலைத்திருக்க இனிய தந்தேரஸ் வாழ்த்துக்கள்” 

“இந்த தெய்வீக சந்தர்ப்பத்தில் அன்னை லட்சுமியுன் குபேரரும் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்தை வழங்கட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தந்தேராஸ் நல்வாழ்த்துக்கள்!!”

“இந்த தீபாவளியும் தந்தேரஸ் சுப தினமும் உங்கள் வாழ்வில் செல்வத்தையும், சுபிட்சத்தையும், மகிழ்சியையும் கொண்டு வரட்டும். வற்றாத செல்வமும் சந்தேஷமும் என்றும் நிலைத்து இருக்கட்டும். இனிய தந்தேரஸ் வாழ்த்துக்கள்!” 

இந்த வாழ்த்து செய்திகளை அனுப்பி, மகிழ்ச்சியையும் இன்பத்தையும் பரிமாறிக்கொள்ளுங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இனிய தந்தேரஸ் மற்றும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

மேலும் படிக்க | தங்கம் அல்லது வெள்ளி எது விசேஷம்? தந்தேரஸ் நாளில் எதை வாங்குவது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News