தீபாவளி தினத்தன்று நம்மில் பலர் லக்ஷ்மியை வணங்குவதுண்டு. வாழ்வில் ஐஸ்வர்யம் பெருகவும், வாழ்வு சிறக்கவும் நாம் அவரை வழிபடுவோம். இந்த நன்னாளில் சில பொருட்களை வீட்டில் வாங்கி வைப்பதாலும் செல்வ செழிப்பு உண்டாகும். அவை என்னென்ன பொருட்கள் தெரியுமா?
1.பாத்திரங்கள்:
உங்கள் சமையலறை பாத்திரங்களை தீபாவளி தினத்தன்று வாங்குவதால் வீட்டில் செல்வம் பெருகும் என நம்பப்படுகிறது. அதனால், தீபாவளி தினத்தன்று பித்தளை, தாமிரம், வெள்ளி அல்லது களிமண்ணால் செய்யப்பட்ட சமையலறை பாத்திரங்களைக் கொண்டு வழிப்படுவதற்கு தேவையான பிரசாதங்களை தயாரிக்கலாம். இப்படி நீங்கள் தீபாவளி நன்னாளை தொடங்குவதால், இனி வரும் தினங்களும் சுபமானதாக இருக்கும் என நம்பப்படுகிறது.
2.வெள்ளி பொருட்கள்:
தீபாவளியன்று கண்டிப்பாக வாங்க வேண்டிய பொருட்களுள் ஒன்றாக கருதப்படுவது, வெள்ளி பொருட்கள். இதை, இந்த தினத்தில் வாங்குவது மிகவும் மங்களகரமான விஷயமாக கருதப்படுகிறது. இந்த தினத்தில் வெள்ளி பொருட்களை வாங்குவதால் வீட்டில் பண மழை கொட்டும் என நம்பப்படுகிறது. வெள்ளியில் நகைகள், காசுகள் அல்லது பாத்திரங்கள் என எதை வேண்டுமானாலும் இந்த தினத்தில் வாங்கலாம். வெள்ளியால் உருவான பொருட்களை நாம் எப்போதும் பூஜைக்குரிய பொருளாக கருதுவது குறிப்பிடத்தக்கது.
3.விளக்குகள்:
தீபாவளியையும் தீப ஒளியையும் பிரிக்கவே முடியாது. லக்ஷ்மி தேவிக்கு தினமும் விளக்கு போடுவது நன்மை பயக்கும் என்றாலும், தீபாவளி அதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. லக்ஷ்மியை வீட்டில் அழைப்பதற்கு தீபாவளியன்று விளக்குகளை வாங்கலாம் என சில ஜோதிடர்கள் கூறுகின்றனர். இது வீட்டிற்கும் வாழ்க்கைக்கும் அழகு சேர்க்குமாம்.
4.துடைப்பம்:
மேற்கூறிய விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியாத நிலையில் இருப்பவராக இருந்தால் நீங்கள் துடைப்பத்தை தீபாவளியன்று வாங்கலாம். இந்த நாளில் துடைப்பத்தை வாங்குவதால் வாழ்வில் அதிர்ஷ்டம் கொட்டுமாம். இதனால் வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் மேம்பட்டு, ஏழ்மை நிலையில் இருந்து மீள உதவுமாம். மேலும், பணம் தொடர்பான பிரச்சனைகளும் இதனால் விலகும் என நம்பப்படுகிறது.
மேலும் படிக்க | பணத்திற்கு பஞ்சமே இருக்காது... இந்த ‘6’ அதிசய செடிகள் இருந்தால் போதும்..!
5.மின்னணு பொருட்கள்:
ஸ்மார்ட் போன், லேப்டாப், டேப்லட், கணினி, தொலைக்காட்சி போன்ற பொருட்களை வாங்குவதற்கு நீங்கள் ப்ளான் போட்டு வைத்திருந்தால் அதற்கு இதை விட்டால் வேறு நல்ல நாள் கிடையாது. இதனால்தான் தீபாவளி தினத்தன்று பல மின்னணு பொருட்கள் விற்கும் கடைகளில் பல்வேறு ஆஃபர்களை போடுவர். கடைகளும் நள்ளிரவானாலும் திறந்திருக்கும். ஆதலா, உங்கள் வீட்டில் உள்ள அல்லது நீங்கள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் மின்னணு பொருட்களை தீபாவளி தினத்தில் அப்க்ரேட் செய்யலாம்.
6.அணிகலன்கள்:
நகைகளை வாங்குவது எப்போதும் புத்திசாலித்தனமான முடிவு. தங்கம் வெற்றி மற்றும் செல்வத்தின் சின்னமாக கருதப்படுகிறது. இது ஒருபோதும் வீணாகாத ஒரு சிறந்த முதலீடு. உங்கள் வீட்டில், இது செழிப்புக்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது. கடினமான காலங்களில் மக்கள் அதை நீண்ட கால சொத்தாக நம்பலாம். இந்தியாவில் தங்கம் வாங்குவதற்கு மிகவும் சாதகமான தினங்களுள் தீபாவளியும் ஒன்று.
7.புதிய துணிகள்:
தீபாவளியன்று புதிய துணிமணிகளை வாங்குதல் எப்போதும் நடக்கும் ஒரு நிகழ்வுதான். இருப்பினும், இந்த தினத்தில் புது துணிகளை வாங்குவதால் நமது பண்டிகையும் இனி வரும் காலங்களும் சிறப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது. இது, வாழ்க்கைக்கும் வெளிச்சம் தரும் என முன்னோர்கள் கூறியுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ