சனி சுக்கிரன் சேர்க்கை: நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட வெற்றி

Navpanchama yogam: நவபஞ்சம ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் அதிகப்படியான நன்மை கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 2, 2023, 04:44 PM IST
  • நவபஞ்சம ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கும்.
  • இக்காலத்தில் பண ஆதாயமும், வெளியூர் பயண வாய்ப்பும் உண்டாகும்.
  • குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும்.
சனி சுக்கிரன் சேர்க்கை: நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட வெற்றி title=

சனி சுக்கிரன் சேர்க்கை, ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களும் நட்சத்திரங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. கிரகங்களின் இந்த மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளில் சாதகமான நல்ல விளைவுகளும் சில ராசிகளில் பாதகமான தீய விளைவுகளும் ஏற்படும். 

சனி பகவான்

சனி தற்போது கும்ப ராசியில் இருக்கிறார். அடுத்த 25 மாதங்கள் அவர் கும்ப ராசியில் இருப்பார். சனி பகவான் இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை ராசி மாறுகிறார். சனி ராசி மாறும்போது சில ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி மற்றும் சனி தசையின் தாக்கமும் ஏற்படுகின்றது. 

சுக்கிரன்

 ஜாதகத்தில் சுக்கிரன் சுபமாக இருந்தால் உலக இன்பங்கள் அனைத்தும் கைகூடும். சுக்கிரன் பலவீனமாகவோ அல்லது அசுபமாகவோ இருந்தால், அந்த நபர் மகிழ்ச்சியை இழக்கிறார். ஜோதிட சாஸ்திரத்தில், சுக்கிரன் ஆடம்பரம், வசதிகள் மற்றும் செழுமைக்கான காரணியாகக் கருதப்படுகிறது. 

நவபஞ்சம ராஜயோகம்

இம்முறை மே மாதம் பல கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றும். இந்த காலத்தில் கிரகங்களின் சேர்க்கையும் உருவாகும். கிரகங்களின் இந்த கூட்டணிகளால் பலவித யோகங்களும் உருவாகும். இந்த மாதம் உருவாகவுள்ள யோகங்களில் முக்கியமானது நவபஞ்சம ராஜயோகம். இந்த யோகம் மே 6 ஆம் தேதி உருவாகும். 

இந்த நேரத்தில் சுக்கிரன் மிதுன ராசியிலும் சனி பகவான் கும்ப ராசியிலும் இருப்பார்கள். இந்நிலையில் நவபஞ்சம ராஜயோகம் உருவாகும். சுக்கிரன், சனி இருவரும் நண்பர்கள். இந்த நவபஞ்சம ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் அதிகப்படியான நன்மை கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

இந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும்

மேஷ ராசி:

நவபஞ்சம ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கும். இக்காலத்தில் பண ஆதாயமும், வெளியூர் பயண வாய்ப்பும் உண்டாகும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும். பழைய முதலீடுகளும் நன்மை தரும். புதிய வருமான ஆதாரங்களையும் உருவாக்க முடியும். உங்களின் தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். மன உளைச்சல் நீங்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மேலும் படிக்க | ராகு பெயர்ச்சி 2023: அடிச்சது ஜாக்பாட், கோடிகளை அள்ளிப்போகும் ராசிகள் இவைதான்

ரிஷப ராசி:

நவபஞ்சம் ராஜயோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய வருமான ஆதாரங்களை அதிகரிக்கப் போகிறது. எதிர்பாராத இடங்களிலிருந்து பணம் கிடைக்கலாம், அல்லது சிக்கிய பணம் திரும்ப வரலாம். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அனைவரும் உங்களைப் பாராட்டும் வகையில் உங்கள் பேச்சு கவர்ச்சியாக மாறும். 

திரைப்படம், கலை, ஊடகம் அல்லது படைப்பாற்றல் துறையில் பணிபுரிபவர்களுக்கு நேரம் அற்புதமாக இருக்கும். மாணவர்கள் இந்தக் காலத்தில் சுப பலன்களைப் பெறுவார்கள்.

மிதுன ராசி:

மிதுன ராசிக்காரர்கள் நவபஞ்சம் ராஜயோகத்தால் சுப பலன்களைப் பெறுவார்கள். சனி பகவான்  உங்கள் ஜாதகத்தில் அதிர்ஷ்டத்திற்கு முழு ஆதரவை வழங்குவார். ஆகையால் இந்த காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவையும் பெறுவீர்கள். இதனுடன் மாணவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் போட்டித் தேர்வுகளிலும் வெற்றி காண்பீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். புதிய தொடர்புகள் உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஆண்டின் முதல் சந்திர கிரகணம்: 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பெளர்ணமி போல் மின்னும்

Trending News