குரு அருளால் 2024 முழுதும் இந்த ராசிகளுக்கு பொற்காலம்.. வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

Guru Vakra Nivarthi: குரு பகவான் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் வக்ர நிவர்த்தி (Guru Margi) அடைந்தாலும், அந்த மாற்றத்தின் ஆக்கப்பூர்வ விளைவுகளின் தாக்கம் சில ராசிகளில் இந்த ஆண்டு முழுதும் இருக்கும் என ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 6, 2024, 02:36 PM IST
  • கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும்.
  • இப்போது முதலீடு செய்ய ஏற்ற நேரம்.
  • இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபமும் பலனும் கிடைக்கும்.
குரு அருளால் 2024 முழுதும் இந்த ராசிகளுக்கு பொற்காலம்.. வெற்றியின் உச்சம் தொடுவார்கள் title=

குரு வக்ர நிவர்த்தி: ஜோதிட சாஸ்திரத்தின் படி, பல ராசிகளுக்கு 2023 ஆம் ஆண்டின் கடைசி மாதம் அத்தனை நல்ல பலன்களை அளிகவில்லை. ஆனால், பிறந்திருக்கும் 2024 புத்தாண்டு பெரும்பாலான ராசிகளுக்கு அமோகமாக உள்ளது. 2023 ஆம் ஆண்டின் இறுதியில், டிசம்பர் 31 ஆம் தேதி குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைந்தார். டிசம்பர் 31, 2023 அன்று காலை 7:08 மணிக்கு குரு மேஷ ராசியில் வக்ர நிவர்த்தி (Jupiter Direct) அடைந்தார். குருவின் இந்த மாற்றம் பல ராசிகளில் சாதகமான, ஆக்கப்பூர்வமான விளைவுகளை ஏறபடுத்தியுள்ளது. 

குரு வக்ர பெயர்ச்சியால் ராசிகளில் இருந்த அசுப விளைவுகள்
 
ஜோதிட சாஸ்திரத்தின்படி, கடந்த ஆண்டு குருவின் வக்ர பெயர்ச்சியின் எதிர்மறை தாக்கம் 5 ராசிகளில் காணப்பட்டது. இதனால் அந்த ராசிக்காரர்கள் பலவிதமான இடையூறுகளை சந்திக்க நேரிட்டது. குரு பகவான் ஒரு முழுமையான ராசி சுழற்சியை முடிக்க 12 ஆண்டுகள் ஆகும். தற்போது மேஷ ராசியில் குரு வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். குரு வக்ர நிவத்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் இதனால் சில ராசிகளுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். 

2024 அதிர்ஷ்ட ராசிகள் (Lucky Zodiac Signs of 2024) 

குரு பகவான் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் வக்ர நிவர்த்தி (Guru Margi) அடைந்தாலும், அந்த மாற்றத்தின் ஆக்கப்பூர்வ விளைவுகளின் தாக்கம் சில ராசிகளில் இந்த ஆண்டு முழுதும் இருக்கும் என ஜோதிடர்கள் கூறுகிறார்கள். இவர்கள் இந்த ஆண்டு எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள். சொந்த வாழ்க்கை, வீடு, வியாபாரம், அலுவலகம், கல்வி என அனைத்திலும் இவர்கள் உச்சம் தொடுவார்கள். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம் (Aries)

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு திருமண முயற்சிகள் கூடும்.  குரு பகவான் இவர்களின் லக்ன பாவத்தில் வக்ர நிவர்த்தி அடைந்தூள்ளார். அதன் பலன் இந்த ஆண்டு தெரியும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். உணவுகள், உடற்பயிற்சி ஆகியவற்றில் அதிகப்படியான அக்கறை காட்டுவது நல்லது. 

மிதுனம் (Taurus)

மிதுன ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல லாபத்தை பெறலாம். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் இந்த ஆண்டு நீங்கும்.

மேலும் படிக்க | சுக்கிர தசை, அனைத்திலும் வெற்றி: இந்த ராசிகளுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் ராஜயோகம்

கடகம் (Cancer)

இந்த ஆண்டு கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். அவர்களின் கெட்ட காலம் முடிவுக்கு வரும். வேலை மாற்றம் வேண்டுமானால் அந்த ஆசையும் நிறைவேறும். இந்த ஆண்டு வங்கி இருப்பு அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.

தனுசு (Sagittarius)

தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சமயப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பிலும் ஆர்வம் அதிகரிக்கும்.

கும்பம்( Aquarius)

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். இப்போது முதலீடு செய்ய ஏற்ற நேரம். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபமும் பலனும் கிடைக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் நிம்மதி கிடைக்கும். இந்த ஆண்டும் ஆன்மீகப் பயணங்கள் செல்ல வாய்ப்பு கிடைக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நீங்கள் ஜனவரி மாதம் பிறந்தவரா? அப்போ உங்கள் குணம் இப்படித்தான் இருக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News