சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது அருள் மழை, நல்ல காலம் ஆரம்பம்

Sani Peyarchi Palangal: சனி நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்களது நிதி நிலை வலுவடையும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 30, 2024, 02:33 PM IST
  • கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி அதிகப்படியான நற்பலன்களை அளிக்கும்.
  • சட்ட சிக்கல்களில் நிவாரணம் கிடைக்கும்.
  • வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இந்த 97 நாட்களில் நல்ல செய்திகள் கிடைக்கலாம்.
சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது அருள் மழை, நல்ல காலம் ஆரம்பம் title=

Sani Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களுக்கும் தனி முக்கியத்துவம் உள்ளது. சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். அவர் அனைத்து ராசிகளிலும் அதிக நாட்களுக்கு இருப்பதால், அவரது தாக்கமும் அதிகமாக இருக்கின்றது. மக்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார்.

ஒருவர் மீது சனி பகவானின் அருள் இருந்தால் அவர் வாழ்க்கையில் அனைத்து வித செல்வங்களையும் பெறுகிறார். அவருக்கு எந்த வித பிரச்சனைகளும் ஏற்படாது. ஆனால், சனியின் கோவப்பார்வை ஒருவர் மீது பட்டால், அந்த நபரை யாராலும் காப்பாற்ற முடியாது. சனி பெயர்ச்சி மிக முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில ராசிகளுக்கு இதனால் சுப விளைவுகளும் சில ராசிகளுக்கும் பிரச்சனைகளும் வரக்கூடும். 

சனி பகவான் 2023 ஆம் ஆண்டு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சி ஆனார். 2025 வரை அவர் இந்த ராசியிலேயே இருப்பார். இதற்கிடையில், நட்சத்திர மாற்றம், உதயம், அஸ்தமனம், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல மாற்றங்களை மெற்கொள்வார். 2025 ஆம் ஆண்டு அவர் மீன ராசியில் பெயர்ச்சி ஆவார். இதற்கிடையில் இந்த ஆண்டு சனிபகவான் நட்சத்திர பெயர்ச்சி அடைவார். இப்போது பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் இருக்கும் சனி பகவான் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி வக்ர பெயர்ச்சி அடந்து இதே நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு வருவார். 

சனி நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்களது நிதி நிலை வலுவடையும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இங்கே காணலாம்.

விருச்சிகம் (Scorpio):

சனியின் இந்த நட்சத்திர பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிக பலன்களை அள்ளித்தரும். பல வருடங்களாக நிலுவையில் இருந்த வேலைகள் இப்போது வெற்றிகரமாக நடந்து முடியும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். தாயாரின் உடல்நிலை தொடர்பான நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்ஜளுக்கு லாபம் அதிகரிக்கும். 

மேலும் படிக்க | குரு பகவானை வசியப்படுத்தும் வியாழக்கிழமை பரிகாரங்கள்... வழிபாடு...

கன்னி (Virgo)

கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி அதிகப்படியான நற்பலன்களை அளிக்கும். சட்ட சிக்கல்களில் நிவாரணம் கிடைக்கும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இந்த 97 நாட்களில் நல்ல செய்திகள் கிடைக்கலாம். சொத்தை அதிகரிக்க ஏதேனும் முதலீடு செய்திருந்தால், அது நன்மை பயக்கும். பணி நிமித்தமாக பயணம் செய்ய நேரிடலாம். பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் உடல்நிலை குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

கும்பம் (Aquarius)

கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. பண வரவு அதிகமாகும். இதனால் பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மாத ராசிபலன்: ஜூன் மாதம் யாருக்கு ஜாலி? யாருக்கு முடிஞ்சுது ஜோலி...முழு ராசிபலன் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News