Manmohan Singh Emotional Appeal: பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மக்களவைத் தேர்தல் பிரசாத்தின் போது வெறுக்கத்தக்க வகையில் பேசியதன் மூலம் பொது பிரச்சாரத்தின் கண்ணியத்தையும், பிரதமர் பதவிக்குரிய மாண்பையும் மோடி சீர்குலைத்து உள்ளார் என முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜூன் 1 ஆம் தேதி ஏழாவது கட்ட மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பஞ்சாப் வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்த மன்மோகன் சிங், 'ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு பாதுகாக்கப்படும் வளர்ச்சி சார்ந்த முற்போக்கான எதிர்காலத்தை காங்கிரஸால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும்' என்று கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பஞ்சாப் வாக்காளர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஆயுதப்படைகள் மீது "தவறான" அக்னிவீர் திட்டத்தை திணிப்பதற்காக பாஜக அரசாங்கத்தை கடுமையாக தாக்கியுள்ளார். அதாவது தேசபக்தி, வீரம் மற்றும் சேவையின் மதிப்பு நான்கு ஆண்டுகள் மட்டுமே என்று பாஜக நினைக்கிறது. இது அவர்களின் போலி தேசியத்தை காட்டுகிறது" என்று பஞ்சாப் வாக்காளர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி மீது தாக்குதல் தொடுத்த மன்மோகன் சிங், "இந்த தேர்தல் பிரச்சாரத்தின் அரசியல் சொற்பொழிவுகளை உன்னிப்பாக நான் கவனித்து வருகிறேன். மோடி ஜி மிகவும் கொடூரமான வெறுப்புப் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளார். இது முற்றிலும் பிரிவினையை ஏற்படுத்தும். பொது பிரச்சாரத்தின் கண்ணியத்தையும், பிரதமர் பதவிக்குரிய மாண்பையும் சீர்குலைத்த முதல் பிரதமர் மோடி ஜி தான்" எனக் கடுமையாக சாடியுள்ளார்.
மேலும் படிக்க - ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவது தவறே இல்லை - திருமா போடும் திடீர் குண்டு!
"சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ அல்லது எதிர்க்கட்சியையோ குறிவைக்கும் வகையில், கடந்த காலத்தில் எந்தப் பிரதமரும் இதுபோன்ற வெறுக்கத்தக்க, பார்லிமென்டற்ற மற்றும் கரடுமுரடான வார்த்தைகளை பயன்படுத்தியதில்லை. மோடி ஜி மிகவும் கொடூரமான முறையில் வெறுப்பூட்டும் பேச்சுகளில் ஈடுபட்டதாக மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
அவர் என்னைக் குறித்து சில பொய்யான அறிக்கைகளையும் கூறியிருக்கிறார். நான் என் வாழ்நாளில் ஒரு சமூகத்திலிருந்து மற்ற சமூகத்தை தனித்து காட்டியதில்லை. அது பாஜகவின் செயல்" என்று அவர் கூறினார்.
இதையெல்லாம் இந்திய மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கதை இப்போது உச்சத்தை எட்டியுள்ளது. இந்த முரண்பாடு சக்திகளிடமிருந்து நமது அன்பான தேசத்தை காப்பாற்றுவது இப்போது நமது கடமை என்று முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ