அஜித்குமாருடன் நடிக்கும் பிரேமலு நாயகன்! எந்த படத்தில், என்ன கேரக்டர் தெரியுமா?

Premalu Actor Naslen Joins Ajith Kumar : நடிகர் அஜித்குமார் நடித்து வரும் ஒரு புதிய படத்தில் திரைப்பத்தில் பிரேமலு படத்தின் கதாநாயகன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.   

Written by - Yuvashree | Last Updated : May 31, 2024, 10:19 AM IST
  • அஜித்துடன் இணையும் மலையாள நாயகன்
  • பிரேமலு மூலம் பிரபலம்
  • எந்த படத்தில் நடிக்கிறார்?
அஜித்குமாருடன் நடிக்கும் பிரேமலு நாயகன்! எந்த படத்தில், என்ன கேரக்டர் தெரியுமா?  title=

Premalu Actor Naslen Joins Ajith Kumar : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார், தன் கைவசம் தற்போது பல படங்களை வைத்திருக்கிறார். அதில் முக்கியமான படமாக இருப்பது, விடாமுயற்சி. இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் உள்பட பிற வெளிநாடுகளில் நடைப்பெற்றது. இதைத்தொடர்ந்து சென்னையிலும் படப்பிடிப்பு நடைப்பெற்றது. இப்படத்தில் நடிகர் அஜித், தான் நடித்துக்கொடுக்க வேண்டிய காட்சிகளை முடித்து விட்டதாகவும், படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைப்பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர் சைன் செய்திருக்கும் படம்தான், குட் பேட் அக்லி. 

குட் பேட் அக்லி:

கோலிவுட் திரையுலகில் இருக்கும் பெரிய நடிகர்களின் ரசிகர்கள் பலர் தற்போது இயக்குநர்களாக மாறி வருகின்றனர். நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ், அவரை வைத்து விக்ரம் படத்தில் சம்பவம் செய்தது போல, நடிகர் அஜித்குமாரின் பல ஆண்டு ரசிகர் ஆதிக் ரவிச்சந்திரனும் அவரை வைத்து தன் படம் மூலம் சம்பவம் செய்ய இருக்கிறார். அந்த படம்தான், குட் பேட் அக்லி.

தொடங்கியது படப்பிடிப்பு:

அஜித்குமார், விடாமுயற்சி படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே, அவரிடம் கதைக்கூறிய ஆதிக், தனது முந்தைய படங்களிலும் அஜித்குமாரின் கதாப்பாத்திரங்களை ரெஃபரன்ஸாக வைத்திருக்கிறார். ஆதிக் சொன்ன கதை பிடித்துப்போக, படத்தில் நடிக்க உடனே ஓகே சொல்லிவிட்டார், அஜித். இந்த படத்தின் படப்பிடிப்பு, சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. இதில் நடிகர் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  இதில், மலையாள திரையுலகில வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் ஒருவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். 

மேலும் படிக்க | குட் பேட் அக்லி பற்றிய புதிய அப்டேட்.. அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட்

பிரேமலு நாயகன்:

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மலையாளத்தில் வெளியான பல படங்கள், தென்னிந்திய அளவில் சூப்பர் ஹிட் அடித்தன. மஞ்சுமெல் பாய்ஸ், ஆவேசம், பிரம்மயுகம் உள்பட வெளியான படங்களில், இளசுகளின் கவனத்தை அதிகம் ஈர்த்த படம் பிரேமலு. சாதாரண இளைஞனின் காதல் கதையை கூறியிருக்கும் இப்படம், வயதில் இளையவர்களை மட்டுமன்றி, அனைத்த தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தது. இந்த படத்தில், நாயகன் சச்சினாக நடித்திருந்தார் நஸ்லென். தண்ணீர் மத்தன் தினங்கள், வரனே அவஷ்யமுண்ட், குறுதி, சூப்பர் ஷரண்யா, ஜோ அண்ட் ஜோ உள்பர பல வெற்றி படங்களில் நடித்திருக்கும் இவர் பிரேமலு படம் மூலம் அதிக வசூல் பெற்ற மலையாள படத்தின் நாயகன் என்ற பட்டத்தையும் பெற்றார். 23 வயதாகும் இவர் மீது, மலையாள ரசிகைகள் மட்டுமன்றி, தமிழ் ரசிகைகளும் பெரிய க்ரஷ் கொண்டிருக்கின்றனர். 

Good Bad Ugly

அஜித்துடன் இணைகிறாரா? 

அஜித் தற்போது நடித்து வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தில், பல கவனம் ஈர்த்த நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. நடிகர் நஸ்லெனும் அந்த முக்கிய நட்சத்திரங்களுள் ஒருவர், என சொல்லப்படுகிறது. இவர் இப்படத்தில் அஜித்திற்கு தம்பி அல்லது மகன் கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இப்போதைக்கு இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நஸ்லென், அடுத்து பிரேமலு படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார். குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | ‘பிரேமலு’ நாயகி மமிதா நடிக்கும் புதிய தமிழ் படம்! ஹீரோ யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News