OTT Releases : ஓடிடியில் புதிதாக வெளியாகும் படங்களும் தொடர்களும்! எந்த தளத்தில், எதை பார்க்கலாம்?

Latest OTT Releases : வாரா வாரம் ஒவ்வொரு புதுப்படங்களும் தொடர்கலும் ஓடிடியில் வெளியாவதை தொடர்ந்து, இந்த வாரமும் புதிய படங்களும் தொடர்களும் வெளியாக இருக்கின்றன. அவற்றை எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம்!

Latest OTT Releases : இந்தியாவில் அதிகரித்திருக்கும் ஓடிடி தளங்களின் வருகையால், தியேட்டரில் வெளியாகும் படங்கள் பல வெகு விரைவிலேயே செல்போனில் காணும் படி ஆகிவிடுகிறது. தியேட்டரில் படத்தை பார்க்க தவறியவர்கள், தனியாகவோ அல்லது குடும்பத்துடனோ பார்த்து விடுகின்றனர். ஓடிடியில் எண்ணிலடங்கா படங்கள் இருப்பது, சினிமா பிரியர்களுக்கும் இது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அனைத்து வாரங்களும் புதுப்புது படங்களும் தொடர்களும் வெளியாகும். அந்த வகையில், சில புது வரவுகள் இந்த வாரம் வெளியாக இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?

1 /10

உப்பு புளி காரம்: தமிழில், காமெடி குடும்ப தொடராக உருவாகியிருக்கிறது உப்பு புளி காரம். இந்த தொடரை டிஸ்னி ஹாட்ஸ்டார் தொடரில் காணலாம். 

2 /10

Swatantrya Veer Savarkar:  இந்திய வரலாற்று படங்களில் ஒன்றாக உருவாகியிருக்கிறது ஸ்வாதந்த்ரையா வீர் சர்வார்க்கர். இப்படத்தை இந்தியில், ஜீ 5 தளத்தில் நாளை முதல் காணலாம். 

3 /10

Sriranga Neethulu : இந்த ஆண்டு தியேட்டரில் வெளியான கன்னட பட, ஸ்ரீரங்க நீதுலு. இப்படத்தை, ஆஹா தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். 

4 /10

ராமண்ணா யூத்: அரசியல்-காமெடி கதையாக உருவாகியிருக்கிறது ராமண்ணா யூத். இந்த படத்தை நாளை முதல் ஈடிவி வின் தளத்தில் பார்க்கலாம். 

5 /10

Panchayat S3: இந்தியில் உருவாகியிருக்கும் தொடர், பஞ்சாயத். இந்த தொடரின் மூன்றாவது சீசன் அமேசான் ப்ரைம் தளத்தில் நாளை வெளியாகிறது. 

6 /10

ஒரு நொடி: எம்.எஸ் பாஸ்கர், தமன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த படம் ஒரு நொடி. இது ஒரு க்ரைம் த்ரில்லர் படமாகும். இந்த படத்தை தமிழில் ஆஹா தளத்தில் பார்க்கலாம். 

7 /10

Illegal : நீதிமன்ற டிராமாவாக உருவாகியிருக்கிறது இல்லீகல். இந்த தொடரின் மூன்றாவது சீசன் நாளை வெளியாகிறது. இதனை, ஜியோ சினிமா தளத்தில் பார்க்கலாம். 

8 /10

House Of Lies :  த்ரில்லர், காமெடி தொடராக உருவாகியிருக்கிறது ஹவுஸ் ஆஃப் லைஸ். இந்த இந்தி தொடரை ஜீ 5 தளத்தில் பார்க்கலாம். 

9 /10

Eric:  மினி தொடராக உருவாகியிருக்கிறது, எரிக். எய்ட்ஸ் நோய் குறித்து உருவாகியிருக்கும் தொடர் இது. இத்தொடரை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம். 

10 /10

Eileen: ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கும் படம் அய்லீன். த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படத்தை ஜியோ சினிமா தளத்தில் நாளை முதல் (மே 31) பார்க்கலாம்.