இந்தியன் 2 இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள்! இத்தனை பேரா..

Indian 2 Audio Launch Chief Guests And Celebrities List : கமல்ஹாசன் ஹீரோவாக நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேரு ஸ்டேடியத்தில் நாளை (ஜூன் 1) நடைபெற இருக்கிறது. இதில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?

  • May 31, 2024, 14:07 PM IST

Indian 2 Audio Launch Chief Guests And Celebrities List : தமிழ் திரையுலக ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படங்களுள் ஒன்றாக இருக்கிறது, இந்தியன் 2. 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படக்கதையின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகியிருக்கிறது. இதையும் ஷங்கர்தான் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் வேலைகள் மட்டும், சுமார் 5 வருடத்திற்கும் மேலாக நடைப்பெற்று வருகின்றன. இப்படம், வரும் ஜூன் மாதமே வெளியாக இருந்தது. ஆனால், ஒரு சில காரணங்களினால் இதன் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்த நிலையில், இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா, மிக பிரம்மாண்டமாக நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ளும் செலிபிரிட்டிகள் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. 

1 /9

கோலிவுட்டில் வெளிவந்த புரட்சிமிகு படங்களுள் ஒன்று, இந்தியன். இந்த படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 படமும் உருவாகியிருக்கிறது. இந்தியன் 3 திரைப்படமும் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியை படக்குழுவினர் நேற்று அறிவித்தனர். 

2 /9

இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் இருந்து ‘பாரா..’ மற்றும் ‘நீலோர்ப்பம்’ ஆகிய பாடல்கள் வெளியாகி வரவேற்பினை பெற்றிருக்கின்றன. நாளை (ஜூன் 1) நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது.

3 /9

இவ்விழாவில் கலந்து கொள்ள இருக்கும் திரை பிரபலங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அவர்கள் யார் யார் தெரியுமா?

4 /9

சித்தார்த்: பிரபல நடிகர் சித்தார்த், இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறார். இதனால், இவ்விழாவில் அவர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

5 /9

ரன்வீர் சிங்: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், ஷங்கரின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவர் என கூறப்படுகிறது. இவர், ஷங்கரின் மகள் திருமண விழாவிலும் சமீபத்தில் கலந்து கொண்டார். இதையடுத்து, இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் இவர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

6 /9

ராம்சரண்: ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தில் நடிகர் ராம்சரண் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவரும் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தருவார் என கூறப்படுகிறது. 

7 /9

மோகன் லால்: மலையாள நடிகர் மோகன் லால், இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. 

8 /9

சிரஞ்சீவி: தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, இவ்விழாவில் முக்கிய விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. 

9 /9

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிலம்பரசனும், சிவகார்த்திகேயனும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சிம்பு, தற்போது கமல் ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன், கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் அமரன் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார்.