ருச்சக யோகத்தை உருவாக்கும் செவ்வாய்ப் பெயர்ச்சி! மூட்டை மூட்டையாய் பணம் சேரும்!

Mars Tranist Ruchak Yoga : சூரிய மண்டலத்தின் அனைத்து கிரகங்களிலும் செவ்வாய் முக்கிய கிரகமாக கருதப்படுகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 8, 2024, 09:34 PM IST
  • மகிழ்ச்சியை கொண்டு வரவிருக்கும் செவ்வாய்ப் பெயர்ச்சி
  • செவ்வாய் உருவாக்கும் ருச்சக யோகம்
  • 4 ராசிகளுக்கு கோடீஸ்வரராகும் யோகம் வந்தாச்சு...
ருச்சக யோகத்தை உருவாக்கும் செவ்வாய்ப் பெயர்ச்சி! மூட்டை மூட்டையாய் பணம் சேரும்! title=

Mars Tranist Ruchak Yoga : இன்னும் ஓரிரு நாட்களில் உருவாகும் செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகும் அரிதான யோகம், வாழ்க்கையில் அனைத்து நிலையிலும் வெற்றிகளை கொண்டு சேர்க்கும் என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுகிறார்கள். கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலைப்படி ஜாதகத்தில் சில சுப யோகங்கள் உருவாகும்.  

நவகிரகங்களில் செவ்வாய், குரு, சுக்கிரன், புதன், சனி போன்ற கிரகங்களால் உண்டாகும் யோகங்களே பஞ்சமகா புருஷ யோகங்களாகும். இவை ருச்சுக யோகம், பத்திர யோகம், ஹம்சா யோகம், மாளவியா யோகம், சச யோகம் என்று குறிப்பிடப்படுகின்றன. சூரியன், சந்திரன், ராகு கேது ஆகிய கிரகங்கள் யோகத்தை ஏற்படுத்துவதில்லை.  

சூரிய மண்டலத்தின் அனைத்து கிரகங்களிலும் செவ்வாய் முக்கிய கிரகமாக கருதப்படுகிறது. துணிச்சலுக்கும் தைரியத்திற்கும் அதிபதியான செவ்வாய் ஜூன் முதல் நாளன்று தனது சொந்த ராசியான மேஷ ராசியில் நுழையப் போகிறார். மேஷத்தில் ஜூலை 12ம் தேதி வரை இருந்து அருள் பாலிக்கும் செவ்வாய், தனது சஞ்சாரத்தால் ருச்சக ராஜயோகத்தை  உருவாக்குகிறார்.

மேலும் படிக்க | நவகிரகங்களின் இளவரசரின் ராசி மாற்றத்தால், முடி சூடப் போகும் ராசிகள் இவைதான்

42 நாட்கள் மேஷ ராசியில் இருந்து ருச்சக யோகத்தால் அருள் பாலிக்கும் செவ்வாய் கிரகம், சில ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல பலனைத் தரும். செவ்வாய் அதன் கேந்திர வீடுகளில் ஒன்றான 1, 4, 7, 10ம்  வீட்டில் இருந்து அதன் சொந்த ராசியான மேஷம் அல்லது விருச்சிகத்திலோ அல்லது அதன் உச்ச ராசியான மகரத்தில் இருந்தால், ருச்சக யோகம் உருவாகிறது.  

ருச்சக யோகம் உள்ளவர்களின் ஆற்றல் அபரிதமாக அதிகரிக்கும். எந்தவொரு சிக்கலான சூழலிலும் தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் திறன் உருவாகும். துணிச்சலும், கடின உழைப்பும் கொடுக்கும் ருச்சக யோகம் இருந்தால், விளையாட்டுத் துறையில் சிறப்பான இடத்தைப் பிடிக்க உதவும். ஜூன் மாதம் முதல் நாளன்றே உருவாகும் இந்த ராஜயோகம் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பூரண கும்பம் வைத்து வரவேற்கும்.

மேஷம்

மேஷத்தில் சஞ்சரிக்கவிருக்கும் செவ்வாய் கிரகம், மேஷ ராசியின் ஆளும் கிரகமாகும். மேஷ ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். இதுவரை காரியத்தடை ஏதேனும் இருந்திருந்தால் அவை அனைத்தும் நிவர்த்தியாகும். எதிர்காலத்தில் நன்மை பயக்கும் சில தொடர்புகளை ருச்சக யோகம் உருவாக்கிக் கொடுக்கும்.

மேலும் படிக்க | 18 ஆண்டுகளுக்குப் பிறகு சனி நட்சத்திரத்தில் நுழையும் ராகு..! 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

கடகம்

செவ்வாயின் ஜூன் மாத சஞ்சாரம் கடக ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்களை கொண்டு வந்து சேர்க்கும். இந்த காலகட்டத்தில் வருமானம் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களின் முயற்சிக்கு இப்போது நல்ல பலன் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் புதிய முயற்சிகள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை உறுதி செய்ய வரும் செவ்வாய் சஞ்சாரத்தின் போது ருச்சக யோகத்தைக் கொடுக்கிறது.  உங்கள் பணியை மக்கள் பாராட்டுவார்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபகரமான காலம் இது. பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.  

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு ருச்சக யோகத்தினால் தொழில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்ல திட்டமிட்டிருப்பவர்களின் முயற்சிகள் வெற்று பெறும். உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் பணத்தைச் சேமிப்பதிலும் வெற்றி பெறுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தேவர்களுக்கே குருவாக இருந்தாலும் 4 ராசிக்காரர்களுக்கு தொல்லை கொடுக்கும் குரு உதயம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News