மெட்ரோவில் தொங்கியபடி செல்லும் பெண்கள்! வைரலாகும் வீடியோ!

Bengaluru Metro viral video: மெட்ரோ ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக பெண்கள் தொங்கியபடி நிற்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Oct 28, 2023, 03:12 PM IST
  • மெட்ரோ ரயிலில் ஏற்பட்ட கூட நெரிசல்.
  • பெங்களூருவில் பெண்கள் தொங்கியபடி நின்றனர்.
  • வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மெட்ரோவில் தொங்கியபடி செல்லும் பெண்கள்! வைரலாகும் வீடியோ! title=

Bengaluru Metro viral video: சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் முக்கிய தேவையாக உள்ளது.  சாலையில் ஏற்படும் நெரிசல்களை தவிர்க்க மக்கள் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில், பெங்களூருவின் மெட்ரோ ரயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் எப்படி பயணிக்கின்றனர் என்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.  பீக் ஹவர்ஸின் போது மும்பையின் உள்ளூர் ரயில்களில் பயணிகள் எப்படி கூட்டமாக செல்வார்களோ அதே போன்று இந்த வீடியோவும் உள்ளது.  பெங்களூரின் பொதுப் போக்குவரத்து எந்த அளவிற்கு சிரமத்தில் உள்ளது என்பதை இந்த வீடியோ தெளிவாக காட்டுகிறது.  பெங்களூரு போன்ற நகரங்களில் தினசரி பயணிகள் எதிர்கொள்ளும் சவால்களை இது எடுத்துக்காட்டுகிறது. வைரலான இந்த வீடியோ சமூக ஊடக தளங்களில் பல விவாதங்களையும் எழுப்பி உள்ளது.

மேலும் படிக்க | சோப்பை சாப்பிடும் பெண்.. கடைசி வரை வீடியோவை பாருங்கள் ஷாக்கா இருக்கும்

அதிகமான எண்ணிக்கையில் பெண்கள் மெட்ரோ ரயில் பெட்டிகளுக்குள் நுழைய முயல்வதை வீடியோ காட்சிப்படுத்தியது. இந்த வைரலான வீடியோவை பயணி ஒருவர் பதிவு செய்துள்ளார். மும்பை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் பொது போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உண்மையை வெளிப்படுத்துகிறது. சொந்த வாகனங்களில் சென்றால் தான் நேரவிரயம் ஆகிறது என்று மக்கள் பொது போக்குவரத்தை மேற்கொள்கின்றனர்.  ஆனால், பொது போக்குவரத்தில் இப்படி சிரமங்கள் ஏற்படுகிறது.   இரு நகரங்களும் பொது உள்கட்டமைப்பில் முன்னேற்றங்களைக் காணவில்லை என்பதை குறிக்கிறது.

'இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு' என்று அழைக்கப்படும் பெங்களூரில் பயணம் செய்வது ஒரு தண்டனை அனுபவமாகிவிட்டது. பெருநகரங்கள் மட்டுமின்றி, நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நூற்றுக்கணக்கானோர் பல மணிநேரம் நெரிசலில் சிக்கி தவிப்பது, பயணிகளுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளது. புதுமை மற்றும் தொழில்நுட்ப வல்லமைக்கு பெயர் பெற்ற நகரம், தற்போது அதிக சுமையுடன் கூடிய பொது போக்குவரத்து அமைப்புடன் போராடுகிறது.

வைரலான இந்த வீடியோவின் கீழ், “பெங்களூரு மெட்ரோவின் காலை காட்சிகள். மோசமான தலைமை நிர்வாகம்,” என்றும், "பெங்களூரு மெட்ரோவில் பயணிகள் நிரம்பி வழிகிறது" என்றும் மக்கள்  பதிவிட்டுள்ளனர். மேலும் “அடுத்த 10-15 ஆண்டுகளில், போக்குவரத்து சிக்கல்களைத் தவிர்க்க பல நகரங்களில் மெட்ரோ முதன்மையான போக்குவரத்து முறையாக இருக்கும். நகரங்கள் அடுத்த 2-3 தலைமுறையை பற்றி சிந்தித்து இப்போதே திட்டமிட வேண்டும், ஏனென்றால் அத்தகைய உள்கட்டமைப்பு உருவாக்க பல ஆண்டுகள் ஆகும்" என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க | இந்த வீடியோவை ஒருமுறை பாருங்க.. இனி ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடவே மாட்டீங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News