புதுடெல்லி: உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியின் ஐந்து ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். காரணம் அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். இவர்கள், வகுப்பறையில் பிரபல திரைப்பட பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஆன்லைனில் பரவியதால் அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டடு.
இந்த ஆசிரியர்கள் (Teachers) சனிக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் அடிப்படை கல்வித்துறையில் பணியாற்றி வந்தனர். மாணவர்கள் இல்லாத வகுப்பறையில் ஆசிரியர்கள் நடனமாடும் வீடியோ வியாழக்கிழமை ஆன்லைனில் வெகுவாக பரவியது. இதற்காக, இதை கண்டிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், ஆக்ராவின் அடிப்படை கல்வித் துறை இது குறித்த விசாரணைக்கு ஆணையிட்டுள்ளது.
"ஐந்து உதவி ஆசிரியர்கள் மற்றும் அச்சேனெரா தொகுதியில் சாதனில் உள்ள இந்த தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியரும் இந்த சம்பவத்திற்கான தங்கள் விளக்கங்களை சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதற்கு நான்கு ஆசிரியர்கள் பதிலளித்தனர், ஆனால் ஒருவர் பதிலளிக்கவில்லை” என்று கல்வித்
துறை பொறுப்பாளர் பிரஜ்ராஜ் சிங் கூறினார்.
ALSO READ: Viral Video: வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் ஆவேசமாக பேசிய முன்னாள் முதலமைச்சர்
ஆசிரியர்கள் நடனமாடிய வீடியோவை இங்கே காணலாம்:
ஐந்து ஆசிரியர்கள் அளித்த விளக்கமும் போதுமானதாக இல்லாததால், அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக பொறுப்பாளர் கூறினார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் தினேஷ் சந்திர பரிஹாரின் கூற்றுப்படி, இந்த வீடியோ (Video) மார்ச் 17 அன்று படமாக்கப்பட்டது, அவர் தொகுதி வள மையத்தில் ஒரு கல்விப் பட்டறையில் கலந்து கொள்ள சென்றதால் அன்று தான் பள்ளியில் இல்லை என்று அவர் கூறினார்.
"நான்கு ஆசிரியர்கள் சமர்ப்பித்த விளக்கமும் திருப்திகரமாக இல்லை. அடிப்படை கல்வித் துறையின் பிம்பத்திற்கு தீங்கு விளைவித்ததற்காக அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களின் நடத்தை நெறிமுறையற்றது. வகுப்பறையில் பள்ளி நேரத்தில் அவர்கள் இப்படி நடந்திருக்கக்கூடாது, "என்று சிங் கூறினார்.
ALSO READ: Viral Video: இப்படி ஒரு மாமியார் எனக்கு இல்லையே என பொறாமைப்பட வேண்டாம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR