Viral Video: ஹெல்மெட்டில் பதுங்கி இருந்த பாம்பு... கதிகலங்க வைக்கும் வீடியோ!

Viral video of cobra: சமூக ஊடகங்களில் எண்ணிலடங்காத வீடியோக்கள் பகிரப்பட்டாலும் பாம்பு வீடியோக்கள் என்றால் மிக எளிதில் வைரலாகும்

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 2, 2023, 01:19 PM IST
  • பாம்பு வீடியோக்கள் என்றால் மிக எளிதில் வைரலாகும்.
  • பாம்பு என்றால் படையே நடுங்கும்.
  • ஹெல்மெட்டில் எதிர்பாராத விருந்தினரான பாம்பை பார்த்து அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்.
Viral Video: ஹெல்மெட்டில் பதுங்கி இருந்த பாம்பு...  கதிகலங்க வைக்கும் வீடியோ! title=

Viral video of cobra: பாம்புகள், நினைத்தாலே அச்சத்தை கொடுக்கும் ஊர்வன வகை விலங்குகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. சமூக ஊடகங்களில் எண்ணிலடங்காத வீடியோக்கள் பகிரப்பட்டாலும் பாம்பு வீடியோக்கள் என்றால் மிக எளிதில் வைரலாகும். பாம்பு என்றால் படையே நடுங்கும். அதிலும் கடுமையான விஷப்பாம்புகளில் ஒன்றான ராஜ நாகம் என்ற பெயரைக் கேட்டாலே நமது உடல் அச்ச உணர்வு பரவும் என்றால் மிகையில்லை. இந்நிலையில், பயங்கரமான தோற்றத்தையும், கடுமையான விஷத்தையும் கொண்ட  நாகம் ஒன்று, நாம் தினமும் அணியும் ஹெல்மெட்டில் ஒளிந்து கொண்டு இருந்தால் என்ன ஆகும்... நினைத்து பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது அல்லவா.... சமீபத்தில் ஒரு நபர் தனது மோட்டார் சைக்கிள் ஹெல்மெட்டில் எதிர்பாராத விருந்தினரான பாம்பை பார்த்து அதிர்சி அடைந்தார்

இன்ஸ்டாகிராம் பயனர் தேவ் ஸ்ரேஸ்தா பகிர்ந்த ஒரு சிறிய வீடியோ மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்தக் காட்சிகளில், ஹெல்மெட்டுக்குள் ஒரு பாம்பு மறைந்து ஒண்டு இருப்பதைக் காணலாம். அதன் நிறம் மற்றும் அமைப்பு ஹெல்மெட்டின் உட்புறத்துடன் தடையின்றி ஒத்துப் போவதால், சட்டென்று பார்த்த உடன் தெரியாத வண்ணம் இருக்கிறது. 

வைரலாகும் நாகத்தின் வீடியோவை இங்கே காணலாம்:

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Shrestha (@d_shrestha10)

 

மேலும் படிக்க | நம்புங்க! இது அரச குடும்பத்தினரின் திருமணம் இல்லை... திருமண வீடியோ வைரல்

நவம்பர் 1 அன்று வெளியிடப்பட்ட இந்த வீடியோ, சுமார் 45,000 லைக்குகளையும், 4.2 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது. எதிர்பாராத இடத்தில் பாம்பு இருப்பது பலருக்கு பயமாக இருந்தாலும், இது  போன்று பல சம்பவங்களை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். காலணிகள், ஹெல்மெட்டுக்கள் போன்றவற்றை அணியும் போது நாம் கவனமாக இருக்க வேண்டும்.

சமூக ஊடகப் பயனர்கள் இந்த இன்ஸ்டாகிராம் வீடியோ குறித்து கருத்துப் பிரிவில் அதிர்ச்சியும் கவலையும் கலந்த வண்ணம்  தனது கருத்துக்களையும் எண்ணங்களையும் எழுதி உள்ளனர்:

- ஒரு பயனர், "இது மிகவும் ஆபத்தானது." என பதிவிட்டுள்ளார்.

- மற்றொருவர் , "கூடுதல் கவனமாக இருப்பது புத்திசாலித்தனம். அது தான் உயிரை காப்பாற்றிக் கொள்ள உதவும்... நல்லது." என பதிவிட்டுள்ளார்.

- மற்றொரு பயனர், தெளிவாக அசைந்து வரும் பாம்பை பார்ப்பது, "மிகவும் பயமாக இருக்கிறது OMG" என்று பதிவிட்டுள்ளார்.

குறிப்பாக மழைக்காலத்தில் குளிர், இருண்ட இடைவெளிகளை உள்ளடக்கிய பொருட்கள் அல்லது இடங்களைக் கையாள்வது-அது பாதணிகள், கழிப்பறைகள் அல்லது சமையலறை அலமாரிகளாக இருந்தாலும், எச்சரிக்கையுடன் செயல்படுவதற்கு இந்த சம்பவம் நினைவூட்டுகிறது. உஷாராக இருங்கள், ஏனெனில் இந்த வழுக்கும் ஆச்சரியங்கள் குறைந்தபட்சம் எதிர்பார்க்கப்படும் போது நடக்கலாம்.

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகம். இணையத்தில் எண்ணிடங்காத வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அவற்றின் மூலம் நாம் அறியாத விலங்குகளின் வாழ்க்கையை எடுத்துக் காட்டுவதாக இருக்கின்றன. பாம்புகள், வன விலங்குகள், பறவைகள் தொடர்பான பல வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. சில பார்ப்பவர்களுக்கு பீதியை ஊட்டுவதாகவும், சில வேடிக்கையானதாகவும், சில வியப்பில் ஆழ்த்துபவையாகவும் இருக்கும். 

மேலும் படிக்க | இந்த வயசிலயே இப்படியா? இணையத்தை அதிர வைத்த சூப்பர் டான்சர் பாட்டி வீடியோ வைரல்

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | பாம்புடன் விளையாடும் பாப்பா: இணையத்தை பதற வைத்த பகீர் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News