சுறா மீனை சுமந்து செல்லும் கடல் பருந்து... இணையவாசிகளை வியக்க வைத்த வீடியோ!

இணையம் என்பது விசித்திரமான உள்ளடக்கத்தின் களஞ்சியம். இணையத்தில் உலாவும்போது,  வியக்கத்தக்க பல விஷயங்களை பார்க்கவும் அறிந்து கொள்ளவும் முடிகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 15, 2023, 02:33 PM IST
  • விலங்குகளின் வேட்டை அதிர்ச்சியூட்டுபவை.
  • இணையம் என்பது விசித்திரமான உள்ளடக்கத்தின் களஞ்சியம்.
  • கழுகு போன்ற ஒரு பறவை கடற்கரையில் பறக்கும் வீடியோ மிகவும் வரைலாகிறது.
சுறா மீனை சுமந்து செல்லும் கடல் பருந்து... இணையவாசிகளை வியக்க வைத்த வீடியோ! title=

சமூக ஊடக உலகத்தில் தினமும் எண்ணற்ற தகவல்கள், வீடியோக்கள் பகிரப்படும்கின்றனர். இவை சில சமயங்களில் மிகவும் வைரலாகின்றன. விலங்குகளின் வேட்டை அதிர்ச்சியூட்டுபவை. அவற்றை நேரில் பார்க்க திகிலாக இருப்பதால் தான், வீடியோவாக பார்த்தால் ரசிக்கிறோம்.  அதனாலேயே அண்மைக் காலங்களாக விலங்குகளின் பல்வேறு வகையிலான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. அந்த வகையில் 

இணையம் என்பது விசித்திரமான உள்ளடக்கத்தின் களஞ்சியம். இணையத்தில் உலாவும்போது,  வியக்கத்தக்க பல விஷயங்களை பார்க்கவும் அறிந்து கொள்ளவும் முடிகிறது. கழுகு போன்ற ஒரு பறவை அதன் நகங்களால் ஒரு பெரிய மீனைப் பிடித்துக் கொண்டு கடற்கரையில் பறக்கும் வீடியோ மிகவும் வரைலாகிறது. மீன் பலத்த காற்றில் சுழல்வதைக் காணலாம். ஆனால் பறவை அதன் இரையை மிக கெட்டியாக விடாமல் பிடித்திருக்கிறது, உண்மையில், இந்த வீடியோ,  2020, அமெரிக்காவின் டென்னசியில் ஆஷ்லே வைட் என்பவரால் காட்சிப்படுத்தப்பட்டது.  இந்த வீடியோ முதலில் டிராக்கிங் ஷார்க்ஸின் ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டது. தான் தங்கியிருந்த கட்டிடத்தின் 17வது மாடியில் இருந்து வீடியோ எடுத்ததாக வைட் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ மீண்டும் சமூக ஊடக பயனர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சுறா குட்டியை சுமந்து செல்லும் கழுகு அல்லது காண்டரா என்று பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளன.  "இயற்ககை அதிசயம் தான் - அதே நேரத்தில் ஆச்சரியமாகவும் திகிலூட்டுவதாகவும் உள்ளது" என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்தார். 

சமூக ஊடகத்தில் வைரலாகும் வீடியோ:

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு  எடுத்த இந்த வீடியோ வெளிவந்த சிறிது நேரத்திலேயே, பல நிபுணர்கள் பறவை, கடல் பருந்து என்றும் அழைக்கப்படும் ஒரு ஆஸ்ப்ரே என்றும், அதன் நகங்களில் சிக்கியிருப்பது, ஒரு பெரிய ஸ்பானிஷ் கானாங்கெளுத்தியுடன் பறக்கிறது என்று தெளிவுபடுத்தினர். கானாகொழுத்தி மீன் பொதுவாக இப்பகுதியில் அதிகம் காணப்படுகிறது.

மேலும் படிக்க | ஃபேன் மேலே ஹாயா காத்து வாங்கும் பாம்பு.. செம்ம காமெடி வீடியோ

சில நொடிகளே கொண்ட இந்த வீடியோவை சமூக ஊடகத்தில் பதிவிட்டதில் இருந்து நெட்டிசன்கள் அதிக அளவில் பார்த்து வருகின்றனர். பார்த்தவர் பகிர, அதை பார்த்த மற்றொருவர், பிறருக்கு பகிர என பகிர்தலும், பார்த்தலும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.விலங்குகளின் வாழ்க்கையில் வல்லமை பெற்ற விலங்குகள் பலவீனமான விலங்குகளை உண்டு வாழ்கின்றன. விலங்குகளில் வாழ்க்கையில் வல்லவன் வாழ்வான் என்ற வார்த்தை சிறப்பாக பொருந்தும் எனலாம். ஆனால், சில சமயங்களில் பிற உயிரினங்களை வேட்டையாடி வாழும் விலங்குகளும், மற்றொன்றிற்கு உணவாகிறது. சமூக வலைதளத்தில், மிகவும் அபூர்வமான காட்டு வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையிலான பல வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இதற்கு என்றுமே ரசிகர்கள் ஏராளம் உண்டு. வேட்டை விலங்குகளின் சாதுரியமான வேட்டைகள் மூலம், காட்டு வாழ்க்கையில் உள்ள போராட்டங்களை புரிந்து கொள்ளலாம்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | இறந்த தாயை எழுப்பும் குட்டி குரங்கு: இணையத்தை அழவைத்த இழப்பு.... வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News