உயிருக்கு போராடிய ஆமையை மனிதர்களிடம் ஒப்படைத்த சுறா - வைரல் வீடியோ

ஆமை ஒன்று கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், அதனை பத்திரமாக மனிதர்களிடம் ஒப்படைத்த சுறாவின் வீடியோ காண்போரை நெகிழ வைக்கிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 1, 2023, 11:29 AM IST
  • கடலில் நடந்த விநோதம்
  • ஆபத்தில் இருந்த ஆமை
  • காப்பாற்ற உதவிய சுறா
உயிருக்கு போராடிய ஆமையை மனிதர்களிடம் ஒப்படைத்த சுறா - வைரல் வீடியோ title=

கடலில் வாழும் கோடிக்கணக்கான உயிரினங்களின் ஆமையும் ஒன்று. அவற்றில் ஒரு கடல் ஆமை மனிதர்கள் வீசும் குப்பைக் கழிவுகள் மற்றும் வலைகளில் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளது. இதனைப் பார்த்த சுறா ஒன்று அந்த அமையை கையோடு தூக்கிக் கொண்டு மனிதர்கள் இருக்கும் இடத்தை தேடியது. அப்போது அந்த வழியாக வந்த கப்பலை பார்த்த சுறா, ஆமையை வேகவேகமாக கொண்டு வந்து அவர்களிடம் ஒப்படைத்தது. முதலில் கப்பலில் இருந்தவர்களுக்கு புரியவில்லை. பின்னரே ஆமையை தங்களிடம் சுறா ஒப்படைக்க வருவதை உணர்ந்து கொண்டனர்.

மேலும் படிக்க | முதலையை கத்தியால் குத்தபோய் கையை இழந்த நபர்: பெரிய அப்பாடக்கரா இருந்தா மட்டும் இந்த வைரல் வீடியோவ பாருங்க

துல்லியமாக கப்பலுக்குள் கொண்டுவந்து ஆமையை போட்டது சுறா. அதனை எடுத்து பார்த்தபோது கடல் ஆமை உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. எங்கிருந்தோ வந்த கயிறு ஒன்று ஆமையின் கழுத்தில் சுற்றி உயிரைக் குடித்துக் கொண்டிருந்தது. கப்பலில் இருந்தவர்கள் ஆமையின் கழுத்தில் கயிறு இறுக்கியிருப்பதை பார்த்து, பத்திரமாக அதனை எடுத்தனர். பின்னர் ஆமையின் கழுத்தில் இருந்த புண்ணுக்கும் மருந்துபோட்டு மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைக்க, அதுவும் மகிழ்ச்சியாக கடலுக்குள் சென்றது. 

வைரலாகியிருக்கும் அந்த வீடியோவில் நடுக்கடலுக்குள் ஆமையை பிடித்துக் கொண்டு சுறா ஒன்று கப்பலை வட்டமடிக்கிறது. கப்பலுக்குள் இருந்தவர்களுக்கு சுறா என்ன முயற்சிக்கிறது என்பது புரியவில்லை. சில அடி தூரங்கள் சென்றபோது, ஆமையை கப்பலுக்குள் வீச முயற்சிப்பது தெரிந்தது. கப்பலுக்குள் இருந்த ஊழியர்களும் இதனை புரிந்து கொண்டு கப்பலை மெதுவாக இயக்க, பின்பு பொறுமையாக ஆமையை கொண்டு வந்து வீசியது சுறா. ஆமை கப்பலின் படிக்கட்டுகளில் ஏறுவதற்கு சிரமபட்டபோது, அதனை தூக்கி உள்ளே தள்ளிவிட்டு சென்றது. இதனை அங்கிருந்து பார்த்தவர்களுக்கு ஒரே வியப்பாக இருந்தது.

கடலுக்குள் வீசப்படும் ஒவ்வொரு கழிவுப் பொருளும், ஏதாவதொரு முறையில் கடல்வாழ் உயிரினங்களை பாதித்துக் கொண்டிருக்கிறது. இதன் தாக்கம் சுற்றுச்சூழலிலும் எதிரொலிக்கிறது. உலகம் முழுவதும் இதனை புரிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தும் நிபுணர்கள் உரிய காலத்தில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படாவிட்டால் சுற்றுச்சூழலில் மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர். @DailyLoud என்ற டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோ 41 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.  

மேலும் படிக்க | மதிய லஞ்சே சாப்பிட்டச்சி டா.. இன்னுமா டிராபிக் நகரல? ஷாக்கிங் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News