Viral Video: படபடக்கும் விமான இறக்கையின் திருகு; நமது மனமும் தான்

விமான இறக்கை ஒன்றின் திருகு தளர்வாகி கீழே விழும் நிலையில், இருந்ததை காட்டும் சீனாவின் போயிங் 737 விமான பயணி எடுத்த வீடியோ மிகவும் வைரலானது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 10, 2022, 08:08 PM IST
Viral Video: படபடக்கும் விமான இறக்கையின் திருகு; நமது மனமும் தான் title=

பெய்ஜிங்கில் இருந்து ஹெங்யாங்கிற்கு CA1921 விமானத்தில் பயணத்தில் ஏர் சீனா பயணி ஒருவர் இறக்கை ஒன்றின் ஸ்க்ரூ தளர்வாக இருந்ததை வீடியோவை பதிவு செய்து சீன சமூக ஊடக தளமான வெய்போவில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்தால், இறக்கையில் உள்ள அந்த திருகு எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம் என்ற நிலையில் உள்ளது. இந்த பதிவு வைரலானதால், இது தொடர்பாக ஏர் சீனா விமான நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஏர் சீனா தனது போயிங் 737-NG பயணிகள் விமானம் ஒன்றில், கழன்று விழும் நிலையில் இருந்த இறக்கை திருகுகளை பொருத்தியதாக கூறியது. “இணையத்தில் பகிரப்பட்ட ஏர் சைனா விமானம் CA1921 இன் இடது இறக்கையில் இன்போர்டு கேனோ ஃபேரிங்கில் உள்ள தளர்வான ஸ்க்ரூ இருப்பதை கவனத்தில் கொண்ட ஏர் சீனா உடனடியாக விமானத்தின் தொடர்புடைய பகுதிகளை ஆய்வு செய்து, தளர்வான திருகுகளை சரிசெய்தது” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சவுத் சைனா மார்னிங் போஸ்ட்  பத்திரிக்கையில் அந்த அறிக்கை வெளியானது.

மேலும் படிக்க | Viral Video: அப்படி என்ன தான் தூக்கமோ... குட்டியை எழுப்ப போராடும் தாய் யானை

விமானத்தின் போது ஏற்படும் பிரச்சனைக்குரிய காட்சியின் வீடியோ கிளிப் ஆன்லைனில் பரவலாக பகிரப்பட்ட உடனேயே மிகவும் வைரலானது. திருகு அமைந்துள்ள பகுதி முக்கியமாக காற்றோட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

 

 

மேலும் இழுவைக் குறைக்கவும் எரிபொருளைச் சேமிக்கவும் உதவுகிறது. விமானத்தின் இன்போர்டு கேனோ ஃபேரிங்கில் திருகு பொருத்தப்பட்டுள்ளது .  இந்த திருகு ஃபிளாப் டிராக் ஃபேரிங் டெயில் கோன்களை சரி செய்யப் பயன்படுகிறது. இது இன்போர்டு கேனோ ஃபேரிங்கின் ஒரு பகுதியாகும் என விமான நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த சிக்கலுக்கு இரண்டு காரணங்கள்  விமானப் பதிவர் Qiu Qing, Weibo தளத்தில்பதிவிட்டார். "ஒரு வாய்ப்பு என்னவென்றால், திருகு உள்ள இடம் உடைந்திருக்கலாம்; மற்றொரு வாய்ப்பு என்னவென்றால், இந்த நிலையில் நீண்ட நேரத்திற்கு அதிர்வு ஏற்பட்டத்தன் காரணமாக திருகுகள் தளர்வாகி இருக்கலாம் என்றார்.

எவ்வாறாயினும், திருகு ஏன் தளர்வானது அல்லது அது விமானத்தின் பாதுகாப்பை பாதிக்குமா என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் விமான நிறுவனம் அளிக்கவில்லை. இரண்டு ஃபிளாப் டிராக் ஃபேரிங் டெயில் கோன்கள் இல்லாமல் இருப்பதல் பாதிப்பு இல்லை என போயிங் 737-NG இன் உள்ளமைவு விலகல் பட்டியலில் (CDL)  கூறப்பட்டடுள்ளது.

எனினும், திருகு தளர்வானதால், பாதுகாப்பானதாகக் கருதப்பட்டாலும், சீன விமானப் போக்குவரத்துத் துறையின் இரண்டு விமானங்கள் கடந்த சில மாதங்களில் விபத்துக்களை சந்தித்தது.  இதில் மார்ச் மாதம் சீனாவின் தெற்கு குவாங்சி மாகாணத்தில் விபத்துக்குள்ளான சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் சம்பந்தப்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தும் அடங்கும்.

மேலும் படிக்க | Viral Video: சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை இங்கே ‘iPhone’ ட்யூனை இசைக்கிறது..!!

மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News