மின்னல் வேகத்தில் பறக்கும் மீன்! ஆச்சர்யத் தகவலகள்!

ஒரு மீன் பறக்குமா என்பது உங்களுக்கு ஆச்சர்யத்தை கொடுக்கலாம். மீன் எப்போதும் தண்ணீரில் வாழும் ஒரு உயிரினம். ஆனால் காற்றில் பறக்கக்கூடிய சில தனித்துவமான மீன்களும் உள்ளன. அதுவும் மிக வேகமான வேகத்தில் பறக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 19, 2023, 04:05 PM IST
  • பறவைகளின் இறக்கைகள் போல இருப்பதால் இவை எளிதாக காற்றில் படபடத்து தாவுகின்றன.
  • பறக்கும் மீன்கள் அதிகபட்சமாக 6 மீட்டர் உயரம் வரை துள்ளிக் குதிக்கின்றன.
  • அதிகபட்சம் 160 அடி தூரம் வரை தள்ளிச் சென்று தண்ணீரில் விழுகிறது.
மின்னல் வேகத்தில் பறக்கும் மீன்! ஆச்சர்யத் தகவலகள்! title=

பறக்கும் மீன்: ஒரு மீன் பறக்குமா என்பது உங்களுக்கு ஆச்சர்யத்தை கொடுக்கலாம். மீன் எப்போதும் தண்ணீரில் வாழும் ஒரு உயிரினம். ஆனால் காற்றில் பறக்கக்கூடிய சில தனித்துவமான மீன்களும் உள்ளன. அதுவும் மிக வேகமான வேகத்தில் பறக்கும். ஆனால், பறவைகளைப் போல வெகுதூரம் பறக்க முடியாது. இந்த மீன்கள் 200 மீட்டர் வரை மட்டுமே பறக்கும் திறன் கொண்டது. பறக்கும் திறன் கொண்ட மீன் இனங்களின் முன் துடுப்புகள் மிக நீண்டதாக இருக்கும். இது பறவைகளின் இறக்கைகள் போல இருப்பதால் இவை எளிதாக காற்றில் படபடத்து தாவுகின்றன. 

இதனுடன், இந்த இறக்கைகள் தண்ணீரில் நீந்தவும் உதவுகின்றன. இந்த வகை பறக்கும் மீன்கள் கடலின் மேல் மட்டத்துக்கு வரும் போது மற்ற மீன்கள் போலவே துள்ளிக் குதித்து மகிழ்கின்றன. அப்படி துள்ளிக் குதிக்கும் போது இதன் நீண்ட துடுப்புகள் சிறகடிப்பது போன்ற தோற்றத்தை தருகிறது. பெரும்பாலும் இந்த மீன்களின் நீளம் 17 முதல் 30 செ.மீ. என்ற அளவில் இருக்கும். வேட்டையாடும் மீன்களிடமிருந்து தப்பிக்க வேண்டியிருக்கும் போது, ​​அவை தண்ணீருக்கு மேலே, காற்றில் பறக்கின்றன. இந்த மீன்கள் நீளமாக வளர் வளர, அவை மெல்லியதாக மாறும். 

பறக்கும் மீன்கள்  அதிகபட்சமாக 6 மீட்டர் உயரம் வரை துள்ளிக் குதிக்கின்றன. துடுப்புகள் நீளமாக இருப்பதால், இந்த அளவு உயரத்திற்கு தாவுவதற்கு காரணமாக இருக்கிறது. இவை துடுப்பை அசைத்துக் கொள்ளும் வேகம் சுமார் 60 கி.மீ. வேகமாக இருக்கும். இதனால் அவை அதிகபட்சம் 160 அடி தூரம் வரை தள்ளிச் சென்று தண்ணீரில் விழுகிறது.

மேலும் படிக்க | Viral Video: இது பறவை இல்லை சத்தியமா மீன் தான்.. இணையவாசிகளை திகைக்க வைத்த பறக்கும் மீன்!

பறக்கும் மீன்களை நாம் கிளைடர்கள் என்று அழைக்கலாம், ஏனெனில் அவை தண்ணீரில் இருந்து வெளியே வந்தவுடன், அவை காற்றில் பறந்து மீண்டும் தண்ணீருக்கு வரும். தண்ணீரில் இருந்து வெளியே வந்தவுடன் இந்த மீன்கள் சிறகு விரித்து... பறக்க உதவும். இதனுடன், அவை தண்ணீருக்குத் திரும்பும்போது, ​​அவை தங்கள் இறக்கைகளை பின்வாங்குகின்றன. இந்த மீன்களின் ஒரு சிறப்பு என்னவென்றால், அவை தண்ணீருக்கு உள்ளேயும் வெளியேயும் அதனால் தெளிவாக பார்க்க முடியும்.

பறக்கும் மீன்கள் (Flying Fish) மிகவும் நல்ல கிளைடர்கள் என்று விஞ்ஞானிகள் அவர்களைப் பற்றி கூறுகிறார்கள். ஆனால், வெப்பநிலை 20 டிகிரிக்கு குறைவாக இருக்கும் போது, ​​இந்த மீன்களால் அவ்வளவு திறம்பட பறக்க முடியாது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். குறைந்த வெப்பநிலையில் அவர்களின் தசைகள் பலவீனமடையத் தொடங்குவதே இதற்குக் காரணம்.

மேலும் படிக்க | Viral Video: சிங்கங்களிடம் சிக்கி தவித்த முதலை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!

மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News