தமிழகத்திற்கு உதவும் கேரளா அரசு; நன்றி தெரிவித்த நம்மவர்!

கஜா புயலால் பாதித்த தமிழகத்திற்கு உதவும் வகையில் கேரள அரசு சார்பில் ₹10 கோடி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்!

Last Updated : Nov 29, 2018, 11:38 AM IST
தமிழகத்திற்கு உதவும் கேரளா அரசு; நன்றி தெரிவித்த நம்மவர்! title=

கஜா புயலால் பாதித்த தமிழகத்திற்கு உதவும் வகையில் கேரள அரசு சார்பில் ₹10 கோடி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்!

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 40-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. 

புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. எனினும் சில பகுதிகளில் போதுமான வசதிகள் இன்னும் வந்த சேரவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கஜா புயலால் பாதித்த மக்களுக்கு உதவும் வகையில் அரசியல் கட்சிகள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது கேரள அரசு சார்பில் ₹10 கோடி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மேலும் புயல் பாதிப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களின் தேவைக்கு ஏதுவாக நிவாரணப் பொருட்கள் அடங்கிய 14 லாரிகளையும் கேரளா அரசு அனுப்பி வைத்துள்ளது.

முன்னதாக தமிழகத்திற்கு கேரள அரசு உதவ வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் வைத்தது குறிப்பிடத்தக்கது!

Trending News