கண்ணாடிக்குள் சிக்கிய குட்டி சிறுமி செய்த சேட்டை

கண்ணாடிக்குள் சிக்கிய குட்டி சிறுமி செய்த சேட்டை வீடியோ ரசிக்க வைக்கிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 3, 2022, 07:55 PM IST
கண்ணாடிக்குள் சிக்கிய குட்டி சிறுமி செய்த சேட்டை title=

தீபாவளி இப்போது தான் முடிந்தது. மக்கள் கடைகளுக்கு சென்று துணி உள்ளிட்ட வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி ஓய்ந்திருப்பார்கள். ஆனால் அப்போது அவர்களுக்கு கிடைத்திருக்கும் அனுபவம், சுவாரஸ்யங்கள் நிறைந்ததாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால், எப்போதும் ரசிக்கும் சில தருணங்கள் கூட இப்படியான விழாக்காலங்களில் கிடைத்துவிடும். அப்படியான வீடியோ ஒன்று இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. கடைக்கு சென்ற குட்டி சிறுமி, அங்கிருக்கும் கண்ணாடியை பார்த்து தன்னை தானே முட்டிக் கொள்ளும் வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்திருக்கிறது. 

மேலும் படிக்க | குட்டையில் விழுந்த குட்டி யானையை தந்திரமாக மீட்கும் தாய் யானை

அந்த சிறுமி தன்னுடைய முகத்தையே பொம்மையாக நினைத்துக் கொண்டது. இதனால் கண்ணாடியில் தன்னுடைய முகத்தை பார்த்து பார்த்து முட்டி மோதிக் கொள்கிறது. அடிக்கிறது. விளையாடுகிறது. அழகான உடையை வேறு அணிந்து கொண்டு வந்துவிட்டதால், அந்த சிறுமி செய்யும் சேட்டைகள் காண்போரை எல்லாம் வெகுவாக ரசிக்க வைக்கிறது. இங்கு நாம் பாராட்ட வேண்டிய ஒருவரும் இருக்கிறார். சிறுமி செய்த சேட்டையை வீடியோ எடுத்தவர் தான் அந்த நபர். 

கியூட்டாக படம் பிடித்து இணையத்தில் பதிவிட்டுவிட்டதால், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் உள்ளிட்ட வைரல் வீடியோகளில் இந்த குட்டி சிறுமியின் வீடியோவும் இடம்பிடித்துவிட்டது. 20 நொடிகள் மட்டுமே இருக்கும் குட்டி சிறுமியின் வீடியோவை நீங்கள் பார்க்காவிட்டால், அது உங்களுக்கு பாக்கியமில்லை என்று தான் கூற வேண்டும். டிவிட்டரில் பதிவிட்ட இந்த வீடியோ சில மணிநேரங்கில் ஆயிரக்கணக்கான பார்வைகளை பெற்றுவிட்டது. 

மேலும் படிக்க | Viral Video: பசுவை கபளீகரம் செய்ய துடிக்கும் முதலை... அஞ்சாது போராடும் பசு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News