‘தொட்டு தொட்டு விளையாடலாமா?' மீனை கொஞ்சும் பூனை: வைரல் வீடியோ

Funny Cat Video: பூனை இப்படி எல்லாம் செய்யுமா? நம்ப முடியாத வகையில் மீன்களின் மீது பாசத்தை பொழியும் பூனையின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 19, 2022, 02:51 PM IST
  • பாம்பு, பூனை, குரங்கு போன்ற விலங்குகளுக்கு இணையத்தில் தனி மவுசு உள்ளது.
  • வைரலாகி வரும் இந்த வீடியோவில், மீன்களுடன் விளையாடி மகிழும் ஒரு செல்லப் பூனையை காண முடிகின்றது.
  • மீன்களை பூனை கொஞ்சுவதையும் சில இடங்களில் காண முடிகின்றது.
‘தொட்டு தொட்டு விளையாடலாமா?' மீனை கொஞ்சும் பூனை: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணையத்தில் பகிரப்படும் விலங்குகளின் வீடியோக்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாக நாம் காண முடியாத, காண்பதற்கு மிக அரிதான பல விஷயங்களை நாம் இந்த வீடியோக்களில் காண்கிறோம். இணையத்தில் ஒவ்வொரு நாளும் புதிய வீடியோக்கள் வெளியிடப்பட்டு வைரலாகி வருகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களே பெரும்பாலும் அதிகமாக இருக்கின்றன. அதுவும், பாம்பு, பூனை, குரங்கு போன்ற விலங்குகளுக்கு இணையத்தில் தனி மவுசு உள்ளது. 

சமூக ஊடகங்களில் பூனைகளின் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. சில பூனைகள் குறும்புத்தனமானவை, சில மிகவும் வேடிக்கையாகவும் அழகாகவும் இருக்கும். அப்பாவி குழந்தைகளைப் போலவே, பூனைகளும் தங்கள் அப்பாவித்தனத்தால் அனைவரின் மனதையும் வெல்லும். அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், மீன்களுடன் விளையாடி மகிழும் ஒரு செல்லப் பூனையை காண முடிகின்றது. இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். அனைவரும் இந்த வீடியோவை மிகவும் விரும்பி உள்ளனர்.

மேலும் படிக்க | Cute Viral Video: யாருடா இது... கண்ணாடியை பார்த்து குழம்பிப் போன நாய் குட்டி!

வைரலாகி வரும் இந்த வீடியோவில், பூனை ஒன்று வெவ்வேறு மீன்களுடன் விளையாடுவதைக் காண முடிகின்றது. மீன்கள் உள்ள ஒரு குளத்தில் அமர்ந்த இந்த பூனை மகிழ்ச்சியாக மீன்களுடன் விளையாடுகிறது. மீன்கள் பூனையின் அருகில் வரும்போதெல்லாம், பூனை அவற்றை ஆசையாக தடவுகிறது. மீன்களை பூனை கொஞ்சுவதையும் சில இடங்களில் காண முடிகின்றது. 

பூனை மீனை முத்தமிட்டது

மீன்களும் சளைத்தவை அல்ல. அவை ஒவ்வொன்றாக பூனையின் அருகில் வந்து, அதன் தழுவலை அனுபவிக்க ஆசைப்படுவதை வீடியோவை பார்த்தால் புரிந்துகொள்ள முடிகின்றது. அன்பு மிகுதியால் ஒரு மீனுக்கு பூனை முத்தமிடுவதையும் வீடியோவில் காண முடிகின்றது. மீன்கள் மற்றும் பூனையின் இந்த அபூர்வ நட்பு காண மிக அற்புதமாக உள்ளது. 

வீடியோ வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @Yoda4ever என்ற கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நாள் முன்பு பகிரப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 1.8 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இதுவரை 87 ஆயிரம் பேர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.

பூனை மற்றும் மீன்களுக்கு இடையில் உள்ள அன்பு, ஈர்ப்பு மற்றும் பாசத்தை பார்த்து இணையவாசிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். பூனை ஆசையாக மீன்களை தடவிக்கொடுப்பதையும், மீன்களும் மீண்டும் மீண்டும் பூனையின் முன்னால் வந்து அது ஆசையாக தீண்ட காத்திருப்பதையும் இணையவாசிகள் வியந்து பார்த்து பல வித கமெண்டுகளை அளித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | Viral Video: சிறுத்தையிடம் சிக்கி சின்னாபின்னமான முதலை; மனம் பதற வைக்கும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News