நாட்டின் 71-வது குடியரசு தினத்தை நாட்டு மக்கள் கொண்டாடிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடிக்கு அரசியலமைப்பின் நகலை அனுப்ப காங்கிரஸ் முடிவு செய்தது.
இதுதொடர்பான் காங்கிரஸ் ட்விட்டர் பதிவில்., அரசியலமைப்பின் நகல் வந்துகொண்டு இருக்கிறது, புத்தகத்தைப் படிக்க சிறிது நேரம் ஒதுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
பிரபல ஆன்லைன் விற்பனை தளமான அமேசானில் காங்கிரஸ் கட்சியினரால் முன்பதிவு செய்யப்பட்டுள்ள இந்த புத்தகமானது "E Block, E Block, E Block, மத்திய செயலகம், புதுடெல்லி -110011" என்ற முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் பிரதமரின் உத்தியேகப்பூர்வ இல்லமான 7, லோக் கல்யாண் மார்க் என்ற முகவரி இந்த முன்பதிவு குறிப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. என்றபோதிலும் காங்கிரஸ் கட்சியின் அதிகாப்பூர்வ ட்விட்டர் கைப்பிடிப்பு ‘அரசியலமைப்பு புத்தகமானது’ பிரதமரின் அலுவகத்திற்கு செல்லும் என குறிப்பிட்டுள்ளது.
Dear PM,
The Constitution is reaching you soon. When you get time off from dividing the country, please do read it.
Regards,
Congress. pic.twitter.com/zSh957wHSj— Congress (@INCIndia) January 26, 2020
புத்தகம் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், பிரகாசமான மஞ்சள் நாடா அதை மேலும் அழகுபடுத்துவதாகவும் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ள புகைப்படம் காட்டுகிறது. சுவாரஸ்யமாக, பரிசுக்கு பணம் செலுத்தப்படவில்லை மற்றும் பெறுநர் டெலிவரிக்கு பணம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் மத்திய அரசால் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நாடுமுழுவதும் எழுந்துள்ள ஆர்ப்பாட்டங்களை அடுத்து ஒரு அரசியல் புள்ளியை உருவாக்கும் நோக்கில் இது ஒரு போலி பரிசு போல் இருந்தது.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டமானது இந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கான குடியுரிமையை அளிக்க முற்படுகிறது. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டமானது அரசியலமைப்பில் 14-வது பிரிவை பாரபட்சமாகவும், மீறுவதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.