’என்னம்மா இப்படி பண்றீங்களேமா?’ சாகசத்தில் தெறிக்க விடும் விந்தை பெண்களின் வைரல் வீடியோ

ஒவ்வொரு துறையிலும் அசாத்தியமான திறமையைக் கொண்டிருக்கும் பெண்களின் வீடியோ இணையத்தில் வைரலாகியிருக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 29, 2022, 11:26 AM IST
  • பெண்களின் விநோத சாகசங்கள்
  • இணையத்தில் வைரலாகும் வீடியோ
’என்னம்மா இப்படி பண்றீங்களேமா?’ சாகசத்தில் தெறிக்க விடும் விந்தை பெண்களின் வைரல் வீடியோ title=

பெண்கள் என்றாலே குறைத்து மதிப்பிடும் எண்ணம் பொதுவெளியில் மறைந்து வருகிறது. அவர்களுக்கு பல துறைகளிலும் வாய்ப்பு கொடுப்பதால், கிடைப்பதால் தங்களின் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் ஒவ்வொரு துறையிலும் பல அரிய சாதனைகளை பெண்கள் படைத்து வருகின்றனர். அப்படி வித்தைகளை கைவசம் வைத்திருக்கும் ஒரு வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகியிருக்கிறது. 

அதில், சாலையோரம் இருக்கும் வால்போஸ்டில் ஏறும் பெண், திடீரென அந்த போஸ்டின் கம்பியை பிடித்து உடற்பயிற்சி செய்கிறார். மற்றொரு பெண், கால்பந்து மைதானத்தில் பந்தை நேராக அடித்துச் சென்று, வித்தியாசமான ஷாட் மூலம் கோல் அடிக்கிறார். இதனை விஞ்சும் வகையில் பெண் ஒருவர் பைக்கில் ஈடுபடும் சாகசம் வாயடைக்க வைக்கிறது. சாலையில் செல்லும் பைக்கை ஓட்டாமல், நாற்காலியில் அமர்ந்திருப்பது போல், ஒடும் பைக்கில் அமர்ந்திருக்கிறார். இன்னொரு கிளிப்பிங்கில், சர்பிங்கில் இரு பெண்கள் வித்தையை அரங்கேற்றுகின்றனர்.

மேலும் படிக்க | ‘கன்பியூஸ் ஆய்டேன்’: எஸ்கலேட்டரில் குழம்பி நின்ற பூனையின் வேடிக்கையான வைரல் வீடியோ

இதுதான் வியக்க வைக்கும் வித்தையா? என்று பார்க்கும்போது வட்டமாக இருக்கும் உருளை கம்பியில் வளைந்து நெளிந்து வட்டமடிக்கிறார் ஒரு இளம் பெண். இந்த வீடியோ டிவிட்டரில் மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. சாகம் மற்றும் வித்தை மட்டுமல்ல, பெண்களின் சில குறும்புத் தனமும் இந்த வீடியோவில் இருக்கிறது. இது நெட்டிசன்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது. 

மேலும் படிக்க | Viral Video: பசுமை படர்ந்த பாகிஸ்தான் சாலையின் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News