வம்பிழுத்து மாட்டிக்கொண்ட பூனை: வைரலாகும் வீடியோ!

தரையில் படுத்து கொண்டிருக்கும் இரண்டு பூனைகளிடம், ஒரு பூனைக்குட்டி ஓடி சென்று விளையாட்டு காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 16, 2022, 09:08 AM IST
  • அமைதியாகபடுத்து இருக்கும் இரண்டு பூனைகள்.
  • வம்பிழுத்து சேட்டை செய்யும் குட்டி பூனை.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
வம்பிழுத்து மாட்டிக்கொண்ட பூனை: வைரலாகும் வீடியோ! title=

பூனைகளை ஆசையாய் வளர்ப்பவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று ஒரு ஆய்வு கூறுகிறது.  பூனையை வளர்ப்பவர்களுக்கு மட்டுமல்ல அவை செய்யும் குறும்புகளை நாம் கொஞ்ச நேரம் இணையத்தில் கண்டு ரசிக்கையில் நமக்கும் எவ்வித நோயும் வராது போல, அந்தளவிற்கு அவற்றின் குறும்புகள் நம் மனதை இதமாக்குகிறது.  அதுபோன்ற ஒரு குறும்பு பூனைக்குட்டியின் க்யூட்டான செயல் தான் தற்போது இணையவாசிகள் பலரையும் கவர்ந்து, பல ஆயிரம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.  இதுபோன்ற பல அழகான நெஞ்சை கவரும் வீடியோக்கள் இணையத்தில் எக்கச்சக்கமாக உலா வருகின்றன, அதில் ஒரு சிறப்பான வீடியோவை தான் இப்போது பார்க்க போகிறோம்.

மேலும் படிக்க | Viral Video: அப்படி என்ன தான் தூக்கமோ... குட்டியை எழுப்ப போராடும் தாய் யானை

இந்த வீடியோவானது ட்விட்டரில், யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பலரின் பார்வைக்காக பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில், தரையில் இடது புறத்தில் பழுப்பு நிறத்தில் ஒரு பூனையும், வலது ப்புறத்தில் சாம்பல் நிறத்தில் ஒரு பூனையும் எதிரெதிரே அசதியாக படுத்துக்கொண்டு இருக்கிறது.  அப்போது ஒரு கருப்பு நிற பூனைக்குட்டி தரையில் படுத்துக்கொண்டு இருக்கும் இரு பூனைகளுக்கு இடையே வந்து குதித்துக்கொண்டு அங்குமிங்குமாக ஓடி விளையாட்டு காட்டுகிறது.  அந்த பூனைகள் இந்த குட்டி பூனையை பிடிக்க வரும்போது இது ஓடிவிடுகிறது, அந்த இரண்டு பூனையும் எந்திரிக்க முடியாமல் படுத்துக்கொண்டு இருக்கிறது.  பின்னர் இவ்வாறு தொடர்ந்து விளையாட்டு காட்டிய பூனைக்குட்டியை மற்றொரு பூனை துரத்திவிட உடனே அந்த பூனைக்குட்டி ஓடிவந்து இன்னொரு பூனையின் மீது வந்து படுத்துக்கொள்வதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.

 

இணையத்தில் கடந்த ஜூலை-13ம் தேதி பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை ஆயிரக்கணக்கான இணையவாசிகள் கண்டு ரசித்துள்ளதோடு இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.  மேலும் இந்த க்யூட்டான வீடியோவிற்கு இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வைரலாகி வருகின்றன.

மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News