Viral Video : “காலுக்கு மசாஜ் பண்ணு...” பாகனிடம் செல்லமாக சேட்டை செய்த யானை!

Viral Video Of Cute Elephant : ஒரு யானை, தனது பாகனிடம் காலை காண்பித்து மசாஜ் செய்ய சொல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Sep 6, 2024, 06:52 PM IST
  • யானையின் க்யூட் வீடியோ!!
  • பாகனிடம் மசாஜ் செய்ய சொல்கிறது..
  • அந்த வீடியோவை இங்கு பாருங்கள்..
Viral Video : “காலுக்கு மசாஜ் பண்ணு...” பாகனிடம் செல்லமாக சேட்டை செய்த யானை! title=

Viral Video Of Cute Elephant : உலகில் இருப்பதிலேயே மிகவும் பெரிய மிருகங்களுள் ஒன்று, யானை. உலகிலேயே அதிகமாக, ஆப்ரிக்கா மற்றும் ஆசிய கண்டத்தில்தான் அதிகமாக யானைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதாம். அதிலும் குறிப்பாக, அப்ரிக்காவில் பாட்ஸ்வானா, ஜிம்பாவே, டான்சானியா, கென்யா உள்ளிட்ட இடங்களிலும் ஆசியாவில் தாய்லாந்து, இலங்கை, இந்தியா உள்ளிட்ட இடங்களிலும் யானைகள் அதிகமாக இருக்கின்றனவாம். இந்தியாவில், தற்போது 27,000 முதல் 30,000 வரை யானைகள் இருக்கலாம் என கூறப்படுகிறது. அசாம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட இடங்களில்தான் இவை அதிகமாக வாழ்கின்றனவாம். 

யானையின் குணாதிசயம்..

தமிழ்நாட்டில், பல்வேறு இடங்களில் நாம் யானைகளை பார்க்க முடியும். சென்னை, காேவை போன்ற நகரங்களில் இவற்றை பார்ப்பது அரிது என்றாலும், சில விலங்குகள் நல காப்பகத்திலும், கோயில்களிலும் இவற்றை காணலாம். உருவத்தில் பெரிதாக உள்ளத்தில் குழந்தை பாேன்றவை யானைகள். 

மனிதர்களுடன் பழகாத காட்டு யானைகளை நம்ப முடியாது என்பதை தவிர அவையும் பல சமயங்களில் க்யூட்டான விஷயங்களை செய்யும். பிற விளங்குகளை போல கூட்டமாக பயணிக்காத யானைகள், தங்களின் குடும்பத்துடன் அல்லது தனக்கான ஒரு தனி கூட்டத்துடன் மட்டும்தான் பயணிக்குமாம். மனிதர்களுடன் பழகும் யானைகள், நினைத்தால் ஏதேனும் செய்து நம்மை பயமுறுத்த முடியும். ஆனால், அவை நம் பேச்சுக்கு அடி பணிந்து நம்மை பெரும் மதிப்புடன் நடத்துகின்றன. 

மேலும் படிக்க | நாயை வெச்சி செஞ்ச பூனை... அலறிய நெட்டிசன்ஸ்: வைரல் வீடியோ

வைரல் வீடியோ..

ஒரு யானை, தனது பாகனிடம் காலை காண்பித்து மசாஜ் செய்ய சொல்லும் வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

“ஓம்” மந்திரத்தை இந்த யானையின் தும்பிக்கையில் எழுதி வைத்திருக்கின்றனர். இதனால் இது கோயில் யானையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நமக்கு கால் வலிக்கிறது என்றால், பொதுவாக என்ன செய்வோம்? ஒருவர் மடியில் கால் வைத்து காலை அமுக்கி விட சொல்வோம். இந்த யானையோ ஒரு காலை அந்த பாகனிடம் காண்பிக்கிறதே தவிர அவரது மடியில் தனது காலை வைக்கவில்லை. அதற்கு  “தான் கால் வைத்தால், தனது பாகனுக்கு வலிக்கும்”  என்பது தெரிகிறது. 

இவ்வளவு ஸ்மார்டாக இருக்கும் அந்த யானைக்கு பலர் லைக்ஸ்களையும் கமெண்ட்ஸ்களையும் அள்ளி வீசியிருக்கின்றனர். இது, தற்போது சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் லைக்ஸ்களை கடந்து, நிறைய வியூஸ்களையும் அள்ளி வருகிறது. 

மேலும் படிக்க | விஜய் பட பாடலை க்யூட்டாக பாடிய கேரள குழந்தை!! வைரல் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News