பிரதமர் மோடி 5 நாள் அரசு முறைப் பயணமாக சுவீடன், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்றார். முதற்கட்டமாக ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோபென் விமான நிலையத்தில் நேரில் வரவேற்றார்.
சுவீடன் தலைநகர் ஸ்டால்ஹோமில் இன்று 17ம் தேதி முதல் முறையாக நடைபெறும் சுவீடன், நார்வே, பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளை கொண்ட கூட்டமைப்பின் முதல் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசுகிறார்.
இந்த மாநாட்டில் வர்த்தகம், முதலீடு, சுற்றுச்சூழல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பருவநிலை மாற்றம் தொடர்பாகவும் இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்துகின்றனர்.
அதனைத் தொடர்ந்து லண்டனில் 3 நாட்கள் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார் பிரதமர் மோடி மேலும் லண்டன் டவுன் ஹாலில் பிரிட்டன் வாழ் இந்தியர்களிடையே சிறப்புரையாற்றுகிறார்.. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று முதல் ஏப்ரல் 20 வரை வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
#WATCH: Prime Minister Modi received by Swedish Prime Minister Stefan Löfven on arrival in Stockholm, #Sweden. pic.twitter.com/Vj9i2h8Edx
— ANI (@ANI) April 16, 2018
#WATCH: Prime Minister Narendra Modi meets the people of Indian community in Stockholm, #Sweden. pic.twitter.com/eqozV6oBgp
— ANI (@ANI) April 16, 2018