பிரதமர் மோடி 5 நாள் அரசு முறைப் பயணமாக சுவீடன், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றார்.
முதற்கட்டமாக ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் சென்ற பிரதமர் மோடி அந்த பயணத்தை முடித்து, பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு வந்தார்.
அந்நாட்டு வெளியுறவுச் செயலர், போரீஸ் ஜான்சன் முன்னிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பின்னர் 'காமன்வெல்த் உச்சி மாநாட்டில்' பங்கேற்று இருநாடுகளுக்கிடையேயான நட்புறவை வலுப்படுத்தும் திட்டங்கள் குறித்து விவாதித்தார்.
பின்னர், பிரிட்டன் சுற்றுப்பயணத்தை முடித்த பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் ஜெர்மன் சென்றார்.
பெர்லின் விமான நிலையத்தில் மோடியை அந்நாட்டு சான்சலர் ஏஞ்சலா மெர்கெல் நேரில் வரவேற்றார்.
தொடர்ந்து மெர்க்கல் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். பின் இருவரும் இரு நாடுகளின் உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
தனது அரசு முறை சுற்றுப்பயணங்களை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, பெர்லினிலிருந்து டில்லி வந்தடைந்தார்.
அரசு முறை சுற்றுப்பயணங்களை முடித்துக் கொண்டு இந்தியா வந்துள்ள பிரதமர் மோடிக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Prime Minister #NarendraModi has departed for #Delhi from the #Berlin airport, after meeting with German Chancellor #AngelaMerkel, completing his successful three-nation visit. He is expected to arrive here on Saturday morning.
Read @ANI Story | https://t.co/ukkMMrHrLu pic.twitter.com/nzHRsXUjft
— ANI Digital (@ani_digital) April 20, 2018