அண்ணா சீரியல்: அதிரடி என்ட்ரி கொடுத்த ஷண்முகம்.. சௌந்தரபாண்டிக்கு வந்த சவால்..!!

Zee Tamil Anna Serial Today's Episode Update: அதிரடி என்ட்ரி கொடுத்து வெளுத்து வாங்கிய ஷண்முகம்.. சௌந்தரபாண்டிக்கு வந்த சவால் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 12, 2024, 02:01 PM IST
  • அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
  • அதிரடி என்ட்ரி கொடுத்து வெளுத்து வாங்கிய ஷண்முகம்.
  • சௌந்தரபாண்டிக்கு வந்த சவால்.
அண்ணா சீரியல்: அதிரடி என்ட்ரி கொடுத்த ஷண்முகம்.. சௌந்தரபாண்டிக்கு வந்த சவால்..!! title=

Zee Tamil Anna Serial Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணியை செல்வத்திடம் இருந்து ஷண்முகம் அதிரடி என்ட்ரி கொடுத்து காப்பாற்றிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், அண்ணா சீரியலின் (Anna Serial) இன்றைய எபிசோடில், அதாவது, ஷண்முகம் நேராக சௌந்தரபாண்டி வீட்டிற்கு வர செல்வமும் ஏகேஎஸ் அண்ணாச்சியும் பறந்து வந்து முன்னாடி விழ ஷாக் ஆகிறார் சௌந்தரபாண்டி. பிறகு சௌந்தரபாண்டி நீயெல்லாம் ஒரு அப்பனா என்று சௌந்தரபாண்டியையும் முத்துபாண்டியையும் அடி வெளுத்து எடுக்கிறான். 

முத்துபாண்டியும் சௌந்தரபாண்டியும் ஷண்முகத்திடம் அடிவாங்கி கதறுகின்றனர், மேலும் ஷண்முகம் அரிவாளை கொண்டு  வந்து சௌந்தரபாண்டியை வெட்ட போக எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஷண்முகம் உன்னை வெட்டி கொல்றதால ஒன்னும் நடக்க போவது இல்ல என்று ஆவேசப்படுகிறான். 

மேலும் படிக்க | பரணி அடித்த பல்டி! சஸ்பெண்ட் செய்யப்பட்ட முத்துப்பாண்டி..அண்ணா சீரியல் அப்டேட்!

நீ உயிரோட இருக்கும் போதே உனக்கு எதிராக பரணியை நிற்க வைத்து தர்மகத்தா தேர்தலில் அவளை ஜெயிக்க வைத்து காட்டுறேன் என்று சவால் விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | நினைத்தேன் வந்தாய் அப்டேட்: சவால் விடும் சுடர்.. கூட்டு சேர்ந்து இந்து, மனோகரி போடும் திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News