விக்ரம் வேதா ஹிந்தியில் பர்ஸ்ட் லுக் வெளியீடு - ரசிகர்களின் ரியாக்ஷன்

இந்தி ரீமேக்காகும் விக்ரம் வேதா திரைப்படத்தில் நடிக்கும் சைஃப் அலிகானின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 03:12 PM IST
  • ஹிந்தியில் விக்ரம் வேதா ஃபர்ஸ்ட் லுக்
  • சைஃப் அலிகானின் லுக்கை வெளியிட்டா ஹிருத்திக் ரோஷன்
  • செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டம்
விக்ரம் வேதா ஹிந்தியில் பர்ஸ்ட் லுக் வெளியீடு - ரசிகர்களின் ரியாக்ஷன் title=

புஷ்கர் காயத்திரி இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் வேதா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விக்ரம் மற்றும் வேதா கதாப்பாத்திரங்களில் மாதவன் மற்றும் விஜய்சேதுபதி நடித்திருந்தனர். தமிழில் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. மாதவன் கதாப்பாத்திரத்தில் சைப் அலிகான் நடிக்கிறார். விஜய் சேதுபதி ரோலில் ஹிருதிக்ரோஷன் நடிக்கிறார்.

மேலும் படிக்க | வலிமை முதல் நாள் கலெக்ஷன் - அண்ணாத்த சாதனையை முறியடித்ததா? 

தமிழில் இயக்கிய புஷ்கர் காயத்திரி, இந்தியிலும் இப்படத்தை இயக்குகின்றனர். இந்நிலையில், விக்ரமாக நடிக்கும் சைஃப் அலிகானின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிக்கும் ஹிருத்திக் ரோஷன், சைஃப் அலிகானின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். தமிழைப் போலவே இந்தியிலும் இந்த போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒயின் நோட் ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிளான் சி ஸ்டுடியோஸ் ஆகியவை விக்ரம் வேதாவின் இந்தி ரீமேக்கை தயாரிக்கின்றனர். 

கடந்த ஆண்டே முடிக்க திட்டமிடப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா காரணமாக தாமதமானது. ராதிகா அம்பே முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களைத் தவிர ஷாரிப் ஹஷ்மி மற்றும் ரோஹித் சரஃப் ஆகியோரும் நடிக்கிறார்கள். செப்டம்பர் 30 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. விஜய் சேதுபதி ரோலில் நடிக்கும் ஹிருத்திக் ரோஷன் படத்தில் இருந்து விலகுவதாக செய்திகள் வெளியாகின. பின்னர், அவர் தொடர்ந்து நடிக்க முடிவு செய்தார். தமிழில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி தவிர ஷ்ரத்தா ஸ்ரீநாத், கதிர், வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோரின் கதாப்பாத்திரங்களுக்கும் பாராட்டு கிடைத்தது.

மேலும் படிக்க |  ’ஆபாச பேச்சு’ ரவுடி பேபி சூர்யா குண்டர் சட்டத்தில் கைது..! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News