அஜித் இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி

அஜித்தை வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் இயக்குநர் ஹெச்.வினோத், அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 22, 2022, 01:42 PM IST
  • ஹீரோவாக நடிக்க விரும்பும் விஜய்சேதுபதி
  • இளம் இயக்குநர்களிடம் கதை கேட்கிறாராம்
  • அஜித் இயக்குநரின் கதைக்கு கிரீன் சிக்னல்
அஜித் இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி title=

வில்லன் அவதாரம் எடுத்துள்ள விஜய் சேதுபதிக்கு, ஹீரோவாக நடிக்கும் படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக சமீபகாலமாக அமைவதில்லை. பெரிய ஹீரோக்களுக்கு வில்லன் என்றால், உடனே விஜய் சேதுபதியை கூப்பிடும் அளவுக்கு அவருடைய மார்க்கெட் இருக்கிறது. அதனால், அவருடைய கதாநாயகன் மார்க்கெட் நேரெதிராக சரிந்து கிடக்கிறது. அண்மையில் அவருடைய நடிப்பில் வந்த மாமனிதன் மற்றும் கடைசி விவசாயி படங்கள், சராசரிக்கும் கீழாக இருந்தது. விக்ரம் படத்தில் சந்தானம் கதாபாத்திரத்துக்கு நிகராக விஜய் சேதுபதியின் ஹீரோ கதாப்பாத்திரங்கள் பேசப்படவில்லை.

மேலும் படிக்க | இந்த காரணங்களுக்காக தான் புஷ்பா, பேமிலி மேனில் நடித்தேன் - சமந்தா விளக்கம்!

இந்த இமேஜில் இருந்து மீண்டு, மீண்டும் ஹீரோ அவதாரம் எடுக்க வேண்டும் என்ற முடிவிலும் இருக்கிறார் விஜய் சேதுபதி. அதேநேரத்தில் தனக்கு வரும் நெகடிவ் ரோல் கதாப்பாத்திரங்களையும் முழுவதுமாக நிராகரிக்கும் எண்ணமும் அவரிடமில்லை. நல்ல கதாப்பாத்திரங்கள் வந்தால் தைரியமாக ஒப்புக்கொள்ளும் முடிவில் இருக்கிறார். ஹீரோவாக இருக்க வேண்டும் என்பதும் தன்னுடைய எண்ணமாக இருப்பதால், பின்னடைவாக இருக்கும் மார்க்கெட்டை மீண்டும் லைம்லைட்டுக்கு கொண்டு வர தனக்கு நெருக்கமான இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறாராம். 

பலர் கதை கூறியிருந்தாலும், அஜித்தை வைத்து ஏகே 61 படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இயக்குநர் ஹெச். வினோத்தின் கதை மிகவும் பிடித்துவிட்டதாம். இருவரும் ஏற்கனவே படம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதால், ஏகே 61 படத்துக்குப் பிறகு தங்களின் கூட்டணியில் உருவாகும் படத்தின் வேலைகளை தொடங்க இருக்கிறார்களாம். தற்போது ஹெச்.வினோத் ஏகே 61 படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். 

மேலும் படிக்க | நிர்வாணமாக புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ரன்வீர் சிங்!

ஐரோப்பா பயணங்களை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய அஜித், விரைவில் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள இருக்கிறார். செட் ஏற்பாடுகள் தயாராக இருப்பதால், விறுவிறுப்பாக ஏகே 61 படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தில் கவனம் செலுத்த இருக்கிறாராம் ஹெச். வினோத். நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை, தற்போது உருவாகி வரும் ஏகே 61 என மூன்று படங்களும் அஜித் கூட்டணியிலேயே உருவாகியிருப்பதால், அடுத்தப்படத்தில் புதிய மாற்றம் வேண்டும் என்பதற்காக விஜய் சேதுபதியுடன் இணைய இருக்கிறாராம். இதற்கான அறிவிப்புகள் அடுத்த சில மாதங்களில் எதிர்பார்க்கலாம்.  

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News