தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்திற்கும் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
அதேபோல் பண்டிகை தினங்களில் வித்தியாசமான நிகழ்ச்சிகளின் மூலம் மக்களை மகிழ்விக்கவும் ஜீ தமிழ் தவறுவதில்லை. அந்த வகையில் இந்த வருட விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 7 ஆம் தேதி ஜீ தமிழில் சிறப்பு பட்டிமன்றம் முதல் கோட் படத்தின் சிறப்பு நிகழ்ச்சி வரை என பல கொண்டாட்டங்கள் காத்துக் கொண்டிருக்கிறது.
அவை என்னென்ன? அதன் ஒளிபரப்பு நேரம் என்ன என்பது குறித்து முழுமையாக பார்க்கலாம் வாங்க.
மேலும் படிக்க | The GOAT Movie Reunion : கோட் ரெண்டு ரீ-யூனியன்! ஒன்னு விஜய்-சினேகா..இன்னோன்னு யார்?
காலை 9 மணி முதல் 10:30 மணி வரை கலைமாமணி சுகி சிவம் தலைமையில் பக்தி நெறியை பெரிதும் வளர்ப்பவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற உள்ளது.
அதைத்தொடர்ந்து காலை 10:30 மணி முதல் 1:30 மணி வரை விநாயகர் சதுர்த்தி சங்கமம் என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அர்ச்சனா தொகுத்து வழங்க உள்ள இந்த நிகழ்ச்சியில் ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியல் குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர்.
அதுமட்டுமின்றி சரிகமப குழுவினர், டான்ஸ் ஜோடி டான்ஸ் போட்டியாளர்கள், உங்களது பேவரைட் பிரபலங்கள் என பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இந்த விநாயகர் சதுர்த்தி சங்கமம் பல ரவுண்டுகளுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என களை கட்ட உள்ளது.
அடுத்ததாக மதியம் 1:30 மணி முதல் கவின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஸ்டார் திரைப்படம் உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக நமது ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் இளன் இயக்கத்தில் வெளியாகி இருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதை குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து மாலை 5 மணி முதல் 7 மணி வரை தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள கோட் படத்தின் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, தளபதி விஜய் உடன் இணைந்து நடித்த பிரபலங்கள் என அனைவரும் இந்த நிகழ்ச்சியின் கலந்து கொள்கின்றனர். சூட்டிங் பாட்டில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள், படம் உருவான விதம் பாடல்கள் உருவான விதம் என பலரும் அறிந்திடாத பல சூப்பரான விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள உள்ளனர். எனவே இந்த விநாயர் சதுர்த்தி திருநாளை உங்கள் ஜீ தமிழ் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ