Bigg Boss : கெட்ட வார்த்தையில் திட்டிய அனிதா!! கடுப்பான நிரூப்.. | VIDEO

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனிதா சம்பத் நிரூப்பிடம் கெட்ட வார்த்தையில் பேசினார். இந்த விடியோ வைரல்

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : Mar 11, 2022, 05:57 PM IST
  • நிரூப்பிடம் கெட்ட வார்த்தை பேசிய அனிதா
  • விடாமல் துரத்திய நிரூப்
  • எல்லை மீறும் பிக்பாஸ் நிகழ்ச்சி
Bigg Boss : கெட்ட வார்த்தையில் திட்டிய அனிதா!! கடுப்பான நிரூப்.. | VIDEO title=

உலகளவில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். தனியார் தொலைக்காட்சியில் ஒரு மணிநேரம் மட்டுமே ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரம் நேரலையில் ஒளிபரப்பாகி வருகிறது. தொடர்ச்சியாக இடைவிடாது ஒளிபரப்பப்படுவதால் பிக் பாஸ் வீட்டிற்குள் நடைபெறும் அந்தரங்க நிகழ்வுகள் அனைத்துமே இப்போது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வந்தவரை பல காட்சிகள் எடிட் செய்யப்பட்டு மட்டுமே ஒளிபரப்பானது.

மேலும் படிக்க | விபத்து ஏற்படுத்திவிட்டு எஸ்கேப் ஆன பிக்பாஸ் நடிகையின் கணவர்!

மருத்துவ முத்தம், ஓவியா தற்கொலை முயற்சி, புகை பிடிக்கும் காட்சிகள் ஆகியவை தொலைக்காட்சியில் எடிட் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டதால் சர்ச்சைகள் குறைவாகவே இருந்தது. தற்போது 24 மணி நேரம் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல சர்ச்சைகளுக்கு வித்திட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக அனிதா சம்பத் நிரூப்பை கெட்ட வார்த்தையில் திட்டும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

 

உலகம் முழுவதுமே பிக்பாஸ் நிகழ்ச்சி சர்ச்சைகளுக்காகவே பிரபலமானது. அடுத்தவரின் அந்தரங்கங்களை அவர்களது ஒப்புதலுடனே படம்பிடித்துக் காட்டும் காட்சிதான் பிக் பாஸ். இதில் படுக்கையறை காட்சிகள், காதல் காட்சிகள், கொடூர சண்டைகள் அனைத்துமே பிரசித்தம். தொலைக்காட்சியில் எடிட்களுடன் தமிழக நேயர்களுக்காக ஒளிபரப்பான பிக்பாஸ் தற்போது அப்பட்டமாக ஒளிபரப்பாவதால் மக்களுக்கு பல ஷாக்களை கொடுக்கிறது. இந்த விடியோவை பார்ப்பவர்கள் அனிதா இப்படியெல்லாம் பேசுவாரா என வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.

மேலும் படிக்க | BB Ultimate: பிக்பாஸ் கமலஹாசன் அல்டிமேட்டில் இருந்து விலகுவது ஏன்? உறுதியான விலகல்! ரசிகர்கள் ஏமாற்றம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News