சீதா ராமன் அப்டேட்: அம்பலமான சதி வேலைகள்.. சுட்டு கொள்ள துணிந்த மகா.. கிளைமாக்ஸில் நடக்க போவது என்ன?

Seetha Raman Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 4, 2024, 03:35 PM IST
  • சீதா ராமன் : இன்றைய எபிசோட்.
  • மகாலட்சுமியை திட்டும் சேது.
  • தனிமரமாக நிற்கும் மகா.
சீதா ராமன் அப்டேட்: அம்பலமான சதி வேலைகள்.. சுட்டு கொள்ள துணிந்த மகா.. கிளைமாக்ஸில் நடக்க போவது என்ன? title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுபாஷ் கை பட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்து ஜோசியர் உயிரிழந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மகாலட்சுமியை திட்டும் சேது

அதாவது, வீட்டில் எல்லாரும் கூடியிருக்க மகா சீதாவை பார்த்து எதுக்கு ஜோசியரை பார்க்க போய் இருந்த? அவரை மிரட்ட போனியா என்று கேள்வி கேட்க சீதா மிரட்ட போகல உண்மையை சொல்ல வைக்க போய் இருந்தேன் என்று சொல்கிறாள். சேது நீ மாறவே மாட்டியா மகா என்று மகாலட்சுமியை திட்டுகிறார். 

அதன் பிறகு பயத்துடன் வீட்டிற்கு வரும் சுபாஷ் அர்ச்சனாவையும் மகாவையும் ரூமுக்குள் அழைத்து சென்று ஜோசியரை கொன்று விட்ட விஷயத்தை சொல்லி உனக்காக தானே மகா பண்ணேன். பழியை சீதா மேலே போட்டுடு என்று சொல்லி கீழே அழைத்து வருகிறான். அதன் பிறகு ராம் போலீசுடன் வீட்டிற்கு வருகிறான். 

மேலும் படிக்க | அழகு த்ரிஷாவின் அன்சீன் புகைப்படங்கள்! செம க்ளாமரா இருக்காங்களே..

சீதா எதுக்குங்க போலீசுடன் வந்து இருக்கீங்க என்று கேட்க உன்கிட்ட பேசவே பிடிக்கல என்று சொல்லி ஜோசியர் இறந்து விட்டதாக சொல்ல மகா ஏய் சீதா நீ தானே நைட் அவரை பார்க்க போய் இருந்த, கொன்னுட்டியா என்று கேட்க அர்ச்சனாவும் கூட சேர்ந்து சீதாவுக்கு எதிராக தாளம் தட்டுகிறாள். ராம் சீதா கையில் விலங்கு மாட்ட போய் கடைசியில் சுபாஷை கைது செய்ய மகாவும் அர்ச்சனாவும் அதிர்ச்சி அடைகின்றனர். 

ஜோசியரை கொன்னது சுபாஷ் சித்தப்பா தான், ஜோசியர் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் எல்லாம் பதிவாகி இருக்கு என்று அதிர்ச்சி கொடுக்கிறான். இதனால் மகா கோபமாக ரூமுக்குள் சென்று விட சீதா அவளை சந்தித்து என்னையும் என் குழந்தையையும் எதுக்கு கொல்ல பார்க்கறீங்க? எனக்கு என் குழந்தை தான் முக்கியம் நான் வீட்டை விட்டு போயிடுறேன் என்று வெளியே கிளம்பி வர ராம் எனக்கு குழந்தையும் என் பொண்டாட்டியும் தான் முக்கியம். நான் உங்களை என் அம்மாவாக தான் பார்த்தேன், ஆனால் நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல. நானும் இனி இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று கிளம்பி செல்கிறான். 

தனிமரமாக நிற்கும் மகா

பிறகு சேது, துரை, மீரா என எல்லாரும் கிளம்பி செல்ல மகா தனிமரமாக நிற்க தனக்கு தானே தண்டனை கொடுத்து கொள்ள முடிவெடுத்து துப்பாக்கியை தலையில் வைத்து சுட சுடாமல் இருக்கிறது. பிறகு உள்ளே வரும் சீதா நான் தான் குண்டை எடுத்தேன் என்று சொல்ல மாகாண நான் உன்னை கொல்ல நினைத்தாலும் நீ என்னை காப்பாற்ற தான் நினைத்து இருக்க என்று மனம் மாறி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க செல்கிறாள். 

தடுத்து நிறுத்தும் சீதா சேது மாமா கிட்ட மன்னிப்பு கேளுங்க என்று சொல்ல மகாவை எல்லாரும் ஏற்று கொள்ள மொத்த குடும்பமும் ஒன்றாக சந்தோசமடைகின்றனர். இத்துடன் சீதா ராமன் சீரியலுக்கு சுபம் போட்டு மொத்தமாக நிறைவுக்கு கொண்டு வந்துள்ளனர். எனவே சீதா ராமன் கிளைமாக்ஸஸை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சீதா ராமன்

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | 41 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத த்ரிஷா! காரணம் என்ன? அவரே சொன்ன விஷயம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News