இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் நடிகர் ரன்பீர் கபூர் கூட்டணியில் தயாராகி இருக்கும் 'அனிமல்' திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதியன்று வெளியாகிறது.
ரன்பீர் கபூர் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் 'அனிமல்'. இந்தத் திரைப்படம் தற்போது எதிர்வரும் டிசம்பர் ஒன்றாம் தேதியன்று வெள்ளி திரையில் வெளியாகவிருக்கிறது. திருத்தி அமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய வெளியீட்டு தேதியில் சிறந்த உள்ளடக்கத்துடனும், தரமான பிரம்மாண்டத்துடனும் வெளியாகிறது என்ற உறுதிமொழியுடன் வருகிறது.
விதிவிலக்கான பாணியில் கதை சொல்வதில் தனித்துவமான அடையாளத்தை பெற்றவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. ஒரு மறக்க இயலாத சினிமா அனுபவத்தை காட்சியாகவும், கேட்கக் கூடியதாகவும் வழங்குவதற்கான தனது முழுமையான அர்ப்பணிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
Updated poster of Animal is out.
Mark the date 01.12.23 #RanbirKapoor #Animal pic.twitter.com/ouFZY3899c— Ranbir Kapoor Universe (@RanbirKUniverse) July 3, 2023
சமூக வலைதள பக்கத்தில் அவருடைய பதிவின் மூலம் அவர், அனிமல் மீதான தனது ஆர்வத்தையும், ஐந்து மொழிகளிலும் சமமான தாக்கம் மற்றும் சக்தி வாய்ந்த பாடல்களுடன் படத்தின் மேம்பட்ட பதிப்பு தயாராகியிருக்கிறது என பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்த கூடுதல் நேரம்... படத்தின் ஒவ்வொரு அம்சமும் மிக உயர்ந்த தரத்தை கொண்டிருக்கிறது என்பதனை உறுதி செய்து, உள்ளடக்கத்தை மேலும் செழுமைப்படுத்தவும், சிறப்பானதாக மாற்றவும் குழுவை அனுமதித்திருக்கிறது.
அனில் கபூர், ரன்பீர் கபூர், ரஷ்மிகா மந்தானா, பாபி தியோல், திரிப்தி திம்ரி உள்ளிட்ட படர் நடித்திருக்கிறார்கள். இந்த கிளாசிக் கதையை பிரபல தயாரிப்பாளர் பூஷன் குமார் தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதியன்று வெளியாகிறது. இது தொடர்பாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
#1stDecemberANIMALrelease@AnilKapoor #RanbirKapoor @thedeol @iamRashmika@tripti_dimri23 @imvangasandeep #BhushanKumar @VangaPranay @MuradKhetani #KrishanKumar @anilandbhanu @VangaPictures @TSeries @rameemusic @cowvala #ShivChanana @neerajkalyan_24 @sureshsrajan pic.twitter.com/EAGLNTaEy9
— Sandeep Reddy Vanga (@imvangasandeep) July 3, 2023
ரிலீஸ் தேதி மாற்றத்திற்கு இதுவே காரணம்
"ஆகஸ்ட் 11 ஆம் தேதி இந்த படம் வெளியிட முடியாததுக்கு காரணம் குவாலிட்டி தான். இது வழக்கமான காரணமாக இருக்கலாம், ஆனால் அதுதான் உண்மை. குவாலிட்டிக்காகத்தான் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தோம். உதாரணமாக, படத்தில் 7 பாடல்கள் உண்டு. 7 பாடல்களும் 5 மொழிகளில் மாற்ற வேண்டும்.
இந்த 35 பாடல்களையும் 35 பாடலாசிரியர்களை வைத்து வெவ்வேறு பாடகர்களை வைத்து பாட வைக்க வேண்டும். அதனால்தான் நாங்கள் திட்டமிட்ட நாளிலிருந்து படம் அதிக நேரம் எடுத்துக்கொண்டது. நான் இதனை தாமதமாகத்தான் உணர்ந்தேன். இல்லாவிட்டால் டீசரை வெளியிட்டிருக்க மாட்டேன். டீசருக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி" என்றார் படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா.
'அனிமல்' திரைப்படத்தை டி-சிரீஸ் நிறுவனத்தின் பூஷன் குமார் & கிரிஷன்குமார், சினி 1 ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முராத் கெடானி மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸின் பிரனய் ரெட்டி வங்கா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
மேலும் படிக்க | ஃபைண்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட விஜய் சேதுபதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ