நாளை எனக்கு 2 முக்கியமான நிகழ்வுகள்: ரஜினிகாந்த் உற்சாக ட்வீட்

நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது என நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 24, 2021, 01:05 PM IST
நாளை எனக்கு 2 முக்கியமான நிகழ்வுகள்: ரஜினிகாந்த் உற்சாக ட்வீட் title=

இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது ஆகும். இந்த விருதானது லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, ஷியான் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலருக்கு தற்போது வரை வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் தமிழ் திரையுலகம் பற்றி பேசினால், இந்த விருது நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கே.பாலசந்தர் ஆகிய இருவரும் பெற்றுள்ளார்கள்.

அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே (Dadasaheb Phalke) விருது நடிகர் ரஜினிகாந்த்துக்கு (Rajinikanth) அறிவிக்கப்பட்டது. அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இதற்கிடையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருந்ததால் இந்த விழா நடத்தப்படாமல் இருந்தது.

ALSO READ: அண்ணாத்த படத்தின் முதல் பாடல் ரிலீஸ்: எஸ்.பி.பி. குரலில் கடைசியாக ஒரு இண்ட்ரோ பாடல்

இந்நிலையில் தற்போது டெல்லியில் நாளை நடைபெறும் விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு டெல்லிக்கு ரஜினிகாந்த் செல்கிறார்கள். இந்த விருது தொடர்பாக தனது வீட்டின் முன்பு பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது., தாதா சாகேப் பால்கே விருது எனக்குக் கிடைத்திருப்பதில் ரொம்ப மகிழ்ச்சி. இந்த நேரத்தில் கே.பாலசந்தர் சார் இல்லையே என்று வருத்தமாக உள்ளது. இந்த விருது எனக்கு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை" என்று தெரிவித்தார்.

இதனிடையே ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. ஒன்று, மக்களின் அன்பினாலும், ஆதரவினாலும் திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாஹேப் பால்கே விருதினை மத்திய அரசு எனக்கு வழங்கவுள்ளது.

 

 

இரண்டாவது, என்னுடைய மகள் சௌந்தர்யா விசாகன், அவருடைய சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய "HOOTE"என்கிற APP-ஐ உருவாக்கி அதை அறிமுகப்படுத்தவுள்ளார். அதில் மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துக்களையும், விஷயங்களையும், இனி அவர்களது குரலிலேயே எந்த மொழியிலும் "HOOTE APP மூலமாக பதிவிடலாம்... இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சியான "HOOTE APP ஐ என் குரலில் பதிவிட்டு துவங்க உள்ளேன்" இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

ALSO READ: சரவெடி: அண்ணாத்த செகண்ட் லுக் ரிலீஸ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News