வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகியிருக்கும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. ஒருபக்கம் திரையரங்குகள் ஒதுக்கீட்டு தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ கூறியிருக்கும் கருத்து விமர்சனத்தை சந்தித்துவருகிறது. மறுபக்கம் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் சந்தித்து ஆலோசனை நடத்திவருகிறார். உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினரை போட்டியிட்டு சில இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளனர். இதனிடையே வாரிசு பட ரிலீஸ் விவகாரத்தில் உதயநிதிக்கும் நடிகர் விஜய்க்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, அழுத்தங்களை சமாளிக்க அரசியலில் காலடி எடுத்துவைப்பது போன்ற நடவடிக்கைகளை தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திப்பின் மூலமாக விஜய் வெளிப்படுத்துவதாக கருதப்படுகிறது.
இந்நிலையில் மதுரையில் விஜய்யின் ரசிகர்கள்; உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் அரசியல் கட்சிகளின் வாரிசு அரசியலை சீண்டும் வகையில் திமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ் என வாரிசுகளின் படங்களை அச்சிட்டு "எத்தனை வாரிசுகள் இங்கு வந்தாலும் மக்கள் கொண்டாடும் தமிழ்நாட்டின் அரசியல் வாரிசே" என்ற வாசகங்களுடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
மேலும் அந்த போஸ்டரில் காங்கிரஸ் கட்சி இந்திரா காந்தி அவரது மகன் ராகுல் காந்தி, திமுக கட்சி முன்னாள் முதல்வர் கருணாநிதி இன்றைய முதல்வர் ஸ்டாலின், மதிமுக கட்சி தலைவர் வைகோ அவரது மகன் துரை வைகோ, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி ஆகியோரின் புகைப்படங்கள் ஒட்டியுள்ளனர்.
இதற்கிடையே தமிழ்நாட்டில் வாரிசு அரசியல் நிலவிவருவதாக பாஜக தொடர்ந்து கூறிவருகிறது. இப்படிப்பட்ட சூழலில் விஜய்யின் ரசிகர்களும் வாரிசு அரசியலை விமர்சிப்பதன் மூலம் அவர் பாஜகவின் வாரிசாக மாற வேண்டுமென போஸ்டர்கள் மூலம் ரசிகர்கள் கூறுகிறார்களா எனவும் பலர் கேள்வியை முன்வைக்கின்றனர்.
மேலும் படிக்க | வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜூவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்! ஏன் தெரியுமா?
மேலும் படிக்க | வாரிசை பெற்றெடுக்க இருக்கும் விஜய் பட இயக்குநர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ