முடிவுக்கு வந்த நயன் - விக்கி ஹனிமூன்! - பின்னணியில் யார் தெரியுமா?

நடிகை நயன்தாரா- இயக்குநர் விக்னேஷ் தம்பதி தேனிலவுப் பயணமாக கடந்த வாரம் தாய்லாந்துக்குச் சென்றது.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jun 26, 2022, 06:47 PM IST
  • நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 9ஆம் தேதி நடந்தது.
  • தேனிலவுக்காக இருவரும் தாய்லாந்துக்குப் பயணம் சென்றனர்
  • தேனிலவு முடிந்துவிட்டதாக விக்னேஷ் சிவன் இன்ஸ்டகிராமில் பதிவு
முடிவுக்கு வந்த நயன் - விக்கி ஹனிமூன்! - பின்னணியில் யார் தெரியுமா? title=

நடிகை நயன்தாரா- இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 9 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. மாமல்லபுரத்தில் நடந்த இந்தத் திருமணத்தில் திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்த இத்திருமணத்தில் திருமண அழைப்பிதழ் பெற்றிருந்தவர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

திருமணத்தையடுத்து திருப்பதியில் சாமி தரிசனம், அதன் பின்னர் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்வுகள் நடந்தன. அதன் பின்னர் இந்த ஜோடி, தேனிலவுக்காக தாய்லாந்து சென்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகின. குறிப்பாக புதுத் தாலி பளபளக்க வெளியான நயன்தாராவின் ‘ஹாட்’ புகைப்படங்கள் வைரலாகின.

இந்நிலையில் இவர்களது தேனிலவுப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இதுகுறித்த தகவலை இயக்குநர் விக்னேஷ் சிவனே தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அதேபோல இவர்களது தேனிலவு பயணத்தை ஏற்பாடு செய்தது யார் எனும் தகவலையும் அதில் கொடுத்துள்ளார் விக்கி. அதாவது pickyourtrail எனும் நிறுவனம்தான் இதற்காக ஏற்பாடுகளைச் செய்ததாம்.

மேலும் படிக்க | நயன்தாரா எனும் நம்பிக்கை நாயகி! - நயனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?!

இன்ஸ்டகிராமில் தானும் நயன்தாராவும் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள விக்கி, pickyourtrailக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். அதேபோல, தாய்லாந்தில் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலான the siam hotel நிறுவனத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளார் விக்கி.

 the siam hotel வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வுகளை வழங்கியதாகவும் மீண்டும் ஒரு முறை அங்கே விசிட் செய்யவுள்ளதாகவும் விக்னேஷ் சிவன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு? - பாதியிலேயே வெளியேறிய முதலமைச்சர்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News