வெளியானது மோகன்லாலின் டிராமா திரைப்பட டீஸர்!!

வெறும் 27 விநாடிகளை கொண்ட மோகன்லால் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவான டிராமா திரைப்படத்தின் டீஸர் வெளியானது. இதை மோகன்லால் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளார்!

Last Updated : Jul 2, 2018, 04:50 PM IST
வெளியானது மோகன்லாலின் டிராமா திரைப்பட டீஸர்!!  title=

வெறும் 27 விநாடிகளை கொண்ட மோகன்லால் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவான டிராமா திரைப்படத்தின் டீஸர் வெளியானது. இதை மோகன்லால் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளார்!

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகும் திரைப்படம் தான் டிராமா. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெறும் 27 விநாடிகளை கொண்ட மோகன்லால் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவான டிராமா திரைப்படத்தின் டீஸர் வெளியானது. 

இப்படத்தில், நடிகை கானிஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் ஆஷா சரத், அருந்ததி நாக், சித்திக், சுபி சுரேஷ், நிந்த்ஜ், ஷாலின் சோயா, டினி டாம், பைஜூ மற்றும் மைதிலி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு வினு தாமஸ் இசையமைக்கிறார் மற்றும் அஜகப்பன் படத்திற்காக ஒளிப்பதிவு செய்து வருகிறார். தயாரிப்பாளர்களான எம்.கே.நஸார் மற்றும் மகா சுபீர் ஆகியோரின் பங்களிப்பை கொண்டுள்ளது. இது அவர்களின் லில்லி பாட் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் வர்னச்சித் குட் லைன் புரொடக்சன்ஸ் ஆகியவற்றின் கீழ் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இத்திரைப்படம் ஓணம் அன்று வெளியிடப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கபடுகிறது. இதற்கிடையில், மோகன்லால் நடிப்பில் உருவான நீராலி என்ற திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்படத்தக்கது!

 

Trending News