‘மாநாடு’ திரைப்படம் இந்தியில் ரீ-மேக்..! ஹீரோ யார் தெரியுமா..?

Maanaadu Movie Hindi Ramake: தமிழில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான ‘மாநாடு’ படம் இந்தியில் ரீ-மேக் செய்யப்பட உள்ளது. இதில் யார் ஹீரோ தெரியுமா? 

Written by - Yuvashree | Last Updated : Jul 16, 2023, 06:35 AM IST
  • சிம்பு நடிப்பில் வெளியாகியிருந்த படம், மாநாடு.
  • இப்படம் இந்தியில் ரீ-மேக் செய்யப்பட உள்ளது.
  • பிரபல நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்கிறார்.
‘மாநாடு’ திரைப்படம் இந்தியில் ரீ-மேக்..! ஹீரோ யார் தெரியுமா..?  title=

பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2021ஆம் அண்டு வெளிவந்திருந்த ‘மாநாடு’ திரைப்படம் இந்தியில் ரீ-மேக் ஆகவுள்ளது. இதில் பிரபல தென்னிந்திய நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம். 

‘மாநாடு’ திரைப்படம்:

கோலிவுட் சினிமாவின் ஜாலி இயக்குநர் என்று அழைக்கப்படும் வெங்கட் பிரபு இயக்கியிருந்த படம், மாநாடு. இந்த படத்தில் சிலம்பரசன் ஹீரோவாக நடித்திருந்தார். ஒரு மாநாடு, அங்கு நடக்கவிருக்கும் அசம்பாவிதம், அதை தடுக்க நினைக்கும் இளைஞன், அவனுக்கு அந்த நாள் மட்டுமே நாள் கணக்காக ரிபீட் ஆகிறது. இறுதியில் என்ன நடந்தது? என்பதே கதை. இந்த கதையை அதிகம் டென்ஷன் இல்லாமல் மக்கள் ரசிக்கும் வகையில் கூறியிருப்பார் வெங்கட் பிரபு. 

மேலும் படிக்க | ‘உங்க பிரா சைஸ் என்ன..?’ ரசிகர் கேட்ட கேள்விக்கு செருப்படி ரிப்ளை கொடுத்த பிரபல நடிகை..!

படக்குழு:

நடிகர் சிம்பு, ‘மாநாடு’ படத்தில் அப்துல் கலீக் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். சிறுபான்மையினரை பலர் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதால் அதை மாற்ற வேண்டும் என்பதற்காக தான் இஸ்லாமிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்ததாக அவர் தெரிவித்திருந்தார். மலையாள நாயகி கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். எஸ்ஜே.சூர்யா “தலைவரே தலைவரே” என டைலாக் பேசி நகைச்சுவை தனமிக்க வில்லனாக கலக்கியிருந்தார். இவர்கள் மட்டுமன்றி படத்தில் எஸ்.ஏ சந்திர சேகர், Y.G மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

Maanaadu 2

இந்தியில் ரீ-மேக்:

‘மாநாடு’ படம் வெளியாகி சுமார் 2 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில், இந்த படத்தின் இந்தி ரீ-மேக் குறித்த பேச்சு வார்த்தை சமீபத்தில் சில நாட்களாக நடைப்பெற்று வந்தது. ‘பாகுபலி’ படத்தில் நடித்த பிரபல தெலுங்கு நடிகர் ராணாவும அவரது குடும்பத்தாரும் இந்த பட உரிமையை வாங்க மிகுந்த ஈடுபாடு காட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இதில் நடிக்கும் ஹீரோ குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

இவர்தான் ஹீரோ..

சிம்புவன் ‘மாநாடு’ படத்தின் இந்தி ரீ-மேக்கில் நடிக்க வைக்க பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் பேச்சு வார்த்தை நடைப்பெற்றுள்ளது. அந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிய, தற்போது நடிகர் ராணாவே அதில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த செய்தி கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டு விட்டதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய இரு மாெழிகளிலும் ஒரே நேரத்தில் ‘மாநாடு’ படம் உருவாக இருக்கிறதாம். 

வில்லன் யார் தெரியுமா..?

‘மாநாடு’ படத்தின் இந்தி ரீ-மேக்கில் நடிக்க பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவிடம் பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருகிறதாம். அவர் அநேகமாக எஸ்.ஜே.சூர்யாவின் கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என பேசப்படுகிறது. தெலுங்கு கமர்ஷியல் படங்களின் கிங் நடிகர்களுள் ஒருவர் ரவிதேஜா. இவரது பல படங்கள் தமிழிலும் ரீ-மேக் செய்யப்பட்ட வெற்றி பெற்றுள்ளன. இவரை ‘மாநாடு’ இந்தி ரீ-மேக்கில் வில்லனாக பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். 

யார் இயக்குநர்..?

‘மாநாடு’ படத்தின் இந்தி ரீ-மேக்கை வெங்கட் பிரபுவே இயக்குவார் என பேசப்பட்டது. ஆனால் அவர் அடுத்த தளபதி 68 பட வேலைகளில் பிசியாகி விட்டதால் அவரால் மாநாடு ரீ-மேக்கை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரபல இயக்குநர் பிரவீன் சட்டாரு இதை இயக்குவார் என பேசப்படுகிறது. நடிகர் ராணாவின் தந்தையுடைய தயாரிப்பு நிறுவனமான “சுரேஷ் ப்ரொடெக்ஷன்ஸ்” இந்த படத்தை தயாரித்து வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நிறுவனம் இதுவரை கம்மி பட்ஜெட்டில் படங்கள் இயக்கினாலும் நல்ல வசூலினை குவிக்கும் படங்களாக தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | கொளுத்தி போட்ட நடிகை கஸ்தூரி-ஒரே ஒரு வீடியோ பதிவால் பற்றி எரியும் ட்விட்டர்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News