தமன்னாவிற்கு போலீஸ் சம்மன்! நடந்தது என்ன? முழு விவரம்..

Latest News Tamannaah Bhatia : நடிகை தமன்னாவிற்கு மகாராஷ்டிரா போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். இது குறித்துதான் தற்போது இணையதளம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இதன் பின்னணி என்ன? இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Apr 26, 2024, 11:14 AM IST
  • சிக்கலில் சிக்கிய தமன்னா
  • சம்மன் அனுப்பிய சைபர் க்ரைம் போலீஸார்
  • என்ன நடந்தது?
தமன்னாவிற்கு போலீஸ் சம்மன்! நடந்தது என்ன? முழு விவரம்.. title=

Latest News Tamannaah Bhatia : தமிழ் மற்றும் பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர், தமன்னா. பெரும்பாலான திரை பிரபலங்களை போன்று எந்தவித காதல் சர்ச்சைகளிலும் சிக்காமல் இருந்து இவர், இன்று வேறு வகையில் ஒரு பிரச்சனையை சந்தித்து வருகிறார். 

பாலிவுட்டில் ஜொலிக்கும் தமன்னா:

தமிழில் ‘கேடி’ படம் மூலம் அறிமுகமானவர், தமன்னா. இவர் திரையுலகிற்கு வந்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தாலும், இன்றும் இளமை குறையாமல் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்த கல்லூரி, படிக்காதவன், அயன், பையா உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. இதையடுத்து தொடர்ந்து விஜய், அஜித், ஆர்யா உள்ளிட்ட பல முன்னணி ஹீராேக்களுக்கு ஜோடியாக நடித்தார். 

காேலிவுட்டில் மட்டுமல்ல, தெலுங்கு திரையுலகிலும் இவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அங்கும் ராம் பொத்தினேனி, சித்தார்த், நாக சைதன்யா உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தற்போது தமன்னாவிற்கு 34 வயதாகிறது. சமீபத்தில் ஜெயிலர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த இவர், தென்னிந்திய திரையுலகை தாண்டி பாலிவுட்டிலும் பல ஹிட் படங்களில் நடித்து கொடுத்திருக்கிறார். 

பெரிதும் சர்ச்சைகளில் சிக்காதவர்..

திரை பிரபலமாகவோ அல்லது கேமரா முன்பு இருக்கும் பிரபலமாக இருந்தாலோ அவர்களை சுற்றி எப்போதும் ஏதாவது சர்ச்சைகள் சுழலுவது சகஜம். ஆனால் தமன்னாவை சுற்றி ஓரிரண்டு காதல் கிசுகிசுக்களை தவிர வேறு எதுவும் பெரிதாக எழுந்ததில்லை. தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விஷயங்களை திரைக்கு மறைவிலேயே வைத்துக்கொண்டிருந்த தமன்னா, தற்போது ஒரு பெரும் புகாரில் சிக்கி இருக்கிறார். 

தமன்னாவிற்கு சம்மன்!

நடிகை தமன்னாவிற்கு, மகாராஷ்டிரா போலீஸார் சம்மன் அனுப்பியிருக்கின்றனர். காரணம், அவர் ஃபேர் ப்ளே (Fair Play) என்ற சட்டத்திற்கு புறம்பான ஆன்லைன் செயலியின் ப்ர்மோஷனில் தொடர்பு படுத்தப்பட்டுள்ளார் என்பதுதான். ஃபேர் ப்ளே செயலி, ஒரு ஆன்லைன் கேமிங் அப்ளிகேஷன் ஆகும். இந்த செயலி, 2023ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த வாக்கு விசாரணையில் ஏற்கனவே சஞ்சய் தத், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஆகியோரின் செய்தி தொடர்பு உதவியாளர்களிடமும் பாடகர் பாட்ஷா என்பவரிடமும் வாக்குமூலத்தை பெற்றிருக்கிறது. 

மேலும் படிக்க | தடாலடியாக சம்பளத்தை உயர்த்திய தமன்னா! எவ்வளவு கோடி தெரியுமா?

இந்த செயலி, Viacom 18 என்ற தளத்திடம் அனுமதி பெறாமல் ஐபிஎல் போட்டியினை ஒளிபரப்பு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த கிரிக்கெட் ஒளிபரப்பினால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த வருட ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையாளர்கள் புகார் கொடுத்திருக்கின்றனர். இந்த வழக்கு விசாரணை காரணமாகவே, நடிகை தமன்னா நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாலிவுட் நாயகரை காதலிக்கும் தமன்னா..

நடிகை தமன்னா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா என்பவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. சில இந்தி படங்களில் சேர்ந்து நடித்த இவர்கள், படப்பிடிப்பு தருணங்களில் காதலில் விழுந்ததாகவும் பின்பு டேட்டிங் செய்ய ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது. இவர்கள் வெளியில் ஒன்றாக இருக்கும் வீடியோக்களும், போட்டோக்களும் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கமாகி விட்டது. விஜய் வர்மான குறித்து ஒரு நேர்காணலில் பேசிய தமன்னா, அவர் தனது மகிழ்ச்சிக்கு காரணமானவர் என உணர்ச்சி பொங்க தெரிவித்தார். 

மேலும் படிக்க | தமன்னாவிற்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை இவர்தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News