சார்பட்டா குழுவினரை சந்தித்து வாழ்த்திய கமல் - நன்றி கூறிய படத்தின் நாயகன் ஆர்யா

சமீபத்தில் சார்பட்டா திரைப்படத்தை கண்டு மகிழ்ந்துள்ளார் கமல்ஹாசன். உடனடியாக அப்பட குழுவினரை அழைத்து அனைவரையும் பாராட்டியுள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 6, 2021, 06:47 PM IST
சார்பட்டா குழுவினரை சந்தித்து வாழ்த்திய கமல் - நன்றி கூறிய படத்தின் நாயகன் ஆர்யா title=

கடந்த மாதம் ஜூலை 22 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த படம் சார்பட்டா.  பா.ரஞ்சித் - ஆர்யா கூட்டணியில் உருவான இந்த திரைப்படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்வதற்காக அப்படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால்,  கொரோனா தாக்கத்தால் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் வேறுவழியின்றி ஓடிடியில் ரிலீஸ் செய்தனர். 

1970-80 வட சென்னையில் நடக்கும்  குத்துச்சண்டை போட்டிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சார்பட்டா திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குத்துச்சண்டை வீரனாக நடிக்க ஆர்யா மற்றும் அப்படத்தில் உடன் நடித்த அனைத்து குத்துச் சண்டை வீரர்களும் எடுத்த பயிற்சி வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆனது. குறிப்பாக டான்சிங் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சபீர் இன்றுவரை பேச்சு பொருளாக உள்ளார்.  

ALSO READ | சார்பட்டா பரம்பரை திரைப்படம்: இதுவரை சொல்லப்படாத கதை என நடிகர் சூர்யா பாராட்டு

இன்னிலையில் தான் பார்க்கும் திரைப்படங்கள் பிடித்துவிட்டாள் அப்படக்குழுவை அழைத்து பாராட்டுவது கமல்ஹாசனின் வழக்கம். அதேபோல் சமீபத்தில் சார்பட்டா திரைப்படத்தை கண்டு மகிழ்ந்துள்ளார் கமல்ஹாசன். உடனடியாக அப்பட குழுவினரை அழைத்து அனைவரையும் பாராட்டியுள்ளார். 

 

உங்கள் அன்பிற்கு நன்றி மட்டும் சொல்லிவிட முடியாது. இத்திரைப்படம் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை நீங்கள் எங்கள் மீது வைத்த அன்பும் அக்கறையும் துளியளவும் குறையவில்லை என கமல்ஹாசனுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் சார்பட்டா படத்தின் நாயகன் ஆர்யா.

ALSO READ | Arya 30: வேற லெவல் தோற்றத்தில் ஆர்யா!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News