எதிர்நீச்சல் சீரியலில் புது வில்லன் என்ட்ரி.. யார் இந்த கிருஷ்ணா மெய்யப்பன்?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் புதிதாக கிருஷ்ணசுவாமி மெய்யப்பன் என்பவர் வில்லனாக என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் யார் என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 18, 2023, 11:43 AM IST
  • எதிர்நீச்சல் சீரியலில் புதிய என்ட்ரி.
  • யார் இந்த கிருஷ்ணசுவாமி மெய்யப்பன்?
  • முதல் நாளே இவருடைய மாஸ் என்றி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.
எதிர்நீச்சல் சீரியலில் புது வில்லன் என்ட்ரி.. யார் இந்த கிருஷ்ணா மெய்யப்பன்? title=

எதிர்நீச்சல் சீரியலில் புதிய வில்லன் என்ட்ரி: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் புதிய வில்லனாக கிருஷ்ணசுவாமி மெய்யப்பன் கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆகியுள்ள நடிகர் யார் என்று ரசிகர்கள் இணையத்தில் தேடி வருகின்றனர்.

எதிர்நீச்சல் சீரியல்:
தமிழ் தொலைக்காட்சி தொடர்களுள் மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்குவது, எதிர்நீச்சல் (Ethirneechal Serial). இந்த தொடரை திருசெல்வம் இயக்கி வருகிறார். பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகளையும் அதை அவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் காண்பிப்பதே இந்த எதிர்நீச்சல் தொடர். இந்த சீரியலில் நடித்து வரும் அனைவரின் கதாபாத்திரமும் ரசிகர்களை ஈர்த்துள்ளது. குறிப்பாக மறைந்த நடிகர் மாரிமுத்துக்கு தனி மவுசு என்றே கூறலாம். அதுமட்டுமின்றி எதிர்நீச்சல் சீரியல் பற்றி தான் சின்னத்திரை வட்டாரத்தில் அதிகமாக தற்போது பேசப்பட்டு வருகிறது. இந்த சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதனாலையே டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த சீரியல் மற்ற சீரியல்களை போல இல்லை என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 

மேலும் படிக்க | லியோ படத்தால் திரையரங்கிற்கு வந்த புதிய கட்டுப்பாடுகள்!

மாரிமுத்துக்கு பதில் வேல ராமமூர்த்தி:
இதற்கிடையில் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரமான குணசேகரனாக நடித்துவந்த இயக்குனர், நடிகர் மாரிமுத்து காலமானதை அடுத்து, அவருடைய கதாபாத்திரத்தில் எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி அறிமுகம் செய்யப்பட்டார். ஆனால் அவரும் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் அதிகமாக சீரியலில் வர முடியாது என்ற சூழ்நிலை இருக்கிறது. இதனால் எதிர்நீச்சல் கதையில் இப்போது அதிரடியான மாற்றம் செய்திருக்கின்றனர்.

எதிர்நீச்சல் சீரியலில் புதிய என்ட்ரி:
இந்நிலையில் தற்போது எதிர் நீச்சல் சீரியலில் திங்கள்கிழமை எபிசோடில், புதிய வில்லனாக கிருஷ்ணசுவாமி மெய்யப்பன் அறிமுகமாகி இருக்கிறார். நேற்றைய எபிசோடில் சக்தி மற்றும் ஜனனிக்கு பிரச்சனையை கொடுக்கும் விதமாக புது வில்லன் கிருஷ்ணசுவாமி மெய்யப்பன் என்ட்ரி கொடுத்துள்ளார். அவர் அறிமுகமான முதல் நாளே அவருக்கு ஆதி குனசேகரனுக்கு கொடுக்கப்பட்ட பில்டப் கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில் முதல் நாளே தன்னுடைய மிரட்டல் ஆன நடிப்பையும் காட்டி இருந்தார். 

யார் இந்த கிருஷ்ணசுவாமி மெய்யப்பன்?
இதனிடையே எதிர்நீச்சல் சீரியலில் புதிதாக வில்லனாக அறிமுகமாகி இருக்கும் கிருஷ்ணசுவாமி மெய்யப்பன் நிஜ வாழ்க்கையில் நடிகராகவும், இயக்குனராகவும், தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். இவரது உண்மையான பெயர் ஆர்.ஜே. நெலு ஆகும். ஆர்ஜே நெலு இலங்கை மட்டக்களப்பு பகுதியைச் சேர்தவர். இவர் இலங்கையில் உள்ள சக்தி டிவியில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார். ஆர்;ஜே. நெலு, தற்போது சன் டிவியில் இயக்குனர் திருச்செல்வம் மூலமாக கிருஷ்ணப்ப சுவாமி மெய்யப்பன் கிருஷ்ணாவாக எதிர் நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார். முதல் நாளே இவரது நடிப்பால் அசத்து போன ரசிகர்கள் இவர் யார்? இவரது இனஸ்டா ஐடி எது? என்பதை தேடி வருகின்றனர். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rj NeLu (@rj_nelu)

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rj NeLu (@rj_nelu)

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rj NeLu (@rj_nelu)

எனவே முதல் நாளே இவருடைய மாஸ் என்றியும் டயலாக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இனிவரும் காலங்களில் குணசேகரனை விட கிருஷ்ண மெய்யப்பன்- ஜனனியின் குணசேகரனை தான் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | லியோ படத்திற்கு 7 மணி காட்சிக்கு அனுமதி? தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News