தமிழ் சினிமாவின் மினிமம் கியாரண்டி ஹீரோ என்ற பெயரை சிவகார்த்திகேயன் பெற்றிருக்கிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் டான் படம் வெளியானது.
அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் ப்ரியங்கா அருள்மோகன், சிவாங்கி, பால சரவணன் நடித்திருந்த இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
கடந்த 13ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வலிமை, பீஸ்ட், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட தமிழ் படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
ஆனால் ஆர்ஆர்ஆர், புஷ்பா, கேஜிஎஃப் 2 என்ற வேறு மொழி படங்கள் பெரும் ஹிட்டடித்தன. இப்படிப்பட்ட சூழலில் டான் வெளியாகி வெற்றி பெற்றதன் மூலம் நீண்ட நாள்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஓடிய தமிழ் படம் என்ற பெயரை டான் பெற்றிருக்கிறது.
மேலும் படிக்க | வறுத்தெடுத்த நெட்டிசன்கள்... உருக்கமாய் பதிவிட்ட குக் வித் கோமாளி நடுவர்
அப்பா - மகன் எமோஷனல் காட்சிகள் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியிருப்பதால் இந்த வெற்றி என ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக டான் படமானது டாக்டர் படம் போலவே 100 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் சிவாவின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
It's time to put on your dancing shoes and do the Jalabulajangu with us, because the DON is arriving on June 10th#DonOnNetfix pic.twitter.com/5hQbfTuJ3I
— Netflix India South (@Netflix_INSouth) May 28, 2022
இதற்கிடையே டான் படம் ஓடிடியில் வெளியாவது எப்போது என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிவந்தனர். தற்போது அதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | ‘குறை சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க..’ - அஜித் சொல்லும் ‘கழுதைக் கதை’ யாருக்கு?
அதன்படி டான் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR