2019ம் ஆண்டு ஜெயம் ரவி, காஜல், யோகிபாபு நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அறிமுக படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்கவைத்தவர் பிரதீப். 90's மற்றும் 80's கிட்ஸ்களின் நினைவுகளை தூண்டும் விதமாக இந்தப்படம் அமைந்து இருந்தது. வேல்ஸ் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்து இருந்தது. கோமாளி படத்தில் இடம் பெற்ற பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
மேலும் படிக்க | 'உறியடி' விஜய்குமாரின் அடுத்த படம் இதுதான்! வெளியான தகவல்!
கோமாளி படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அடுத்து என்ன படம் எடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. விஜய் மற்றும் ரஜினிக்கு கதை சொல்லி இருக்கிறார் என்ற தகவலும் வெளியானது. மேலும் தானே ஹீரோவாக நடிக்கும் படத்தின் வேளையில் இருப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது இவர் ஹீரோவாக நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு விஜய் படத்தின் தலைப்பான 'லவ் டுடே' என்று வைக்கப்பட்டு உள்ளது. இந்த தலைப்பை கொடுத்த விஜய்க்கு நன்றி என்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Thanks RbChoudary sir and Thalapathy vijay sir for the title https://t.co/tOcX651I5c
— Pradeep Ranganathan (@pradeeponelife) July 3, 2022
லவ் டுடே தலைப்பை கொடுத்த ஆர்பி சவுத்திரி மற்றும் தளபதி விஜய்க்கு நன்றி என்று பிரதீப் கூறியுள்ளார். ஆனால் 2014ம் ஆண்டு ட்விட்டரில் இவர் விஜய் படத்தை கலாய்த்து எழுதிய சில பதிவுகள் தற்போது வைரல் ஆகி வருகிறது. ரஜினியின் லிங்கா படத்திற்கு முதல் 3 நாட்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை, ஆனால் விஜய்யின் கத்தி படத்திற்கு முதல் நாள் டிக்கெட் எளிதாக கிடைத்தது என்றும், ஜில்லா படத்தின் டப்பிங் சுறா படத்தை விட மோசமாக இருந்ததாகவும் பதிவிட்டுள்ளார். இந்த இரண்டு பதிவுகளும் தற்போது வைரல் ஆகி வருகிறது.
வாழ்க்கை ஒரு வட்டம் டா ...டேய் பிச்சை பொழச்சு போ pic.twitter.com/Va0NoxLoPI
—(@ramuk_srs45) July 3, 2022
மேலும் படிக்க | சுதா கொங்கரா படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து நடிக்கும் துல்கர் சல்மான்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR