Shooting Competition: துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜீத் தங்கம் வெல்வார்

தமிழ்நாட்டில் சில தினங்களுக்கு முன் நடந்த 46ஆவது மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு 6 பதக்கங்களை தட்டி சென்றார் தல அஜித்...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 15, 2021, 06:58 PM IST
  • துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜீத் தங்கம் வெல்வார்
  • படபிடிப்பு இல்லாத போது பயிற்சியில் ஈடுபடுகிறார் தல
  • அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் துப்பாக்கிச் சுடும் போட்டியில் பதக்கம் வெல்வாரா அஜித்?
Shooting Competition: துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜீத் தங்கம் வெல்வார் title=

சென்னை: "பெண்கள் இச்சமூகத்தில் ஒரு சில ஆண்களால் எவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதையும் அவர்களுக்கு விருப்பமே இல்லை யென்றாலும் No means no தான் என தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகராக வலம் வரும்  அஜீத்தினை வைத்து சதுரங்க வேட்டை ,தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய ஹெச்.வினோத் நேர்கொண்ட பார்வை படத்தில் ரீமேக் செய்திருந்தார். இப்படமும் அஜீத் ரசிகர்கள் மட்டுமின்றி பெண்களிடையும்,விமர்சன ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பினை பெற்றது.

இந்நிலையில் அடுத்ததாக மீண்டும் இருவரும் இணைந்து வலிமை படத்தில் பணியாற்றி வருகின்றனர்.இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரும்,ஜீ ஸ்டுடியோவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

படப்பிடிப்பு பணிகள் பாதி முடிவடைந்த நிலையில் வெளிநாடுகளில் ஒரு சில காட்சிகளை படக்குழு எடுக்க திட்டமிட்டுள்ளதால் விரைவில் ரஷ்யாவிற்கு செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நடிகர் அஜீத் துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.இதற்காக சென்னை கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.

Also Read | Chiyaan 60: முடிந்தது சியான் 60: ஆரம்பமானது கோப்ராவின் அதிரடி மாஸ்

தமிழ்நாட்டில் சில தினங்களுக்கு முன் நடந்த 46ஆவது மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு 6 பதக்கங்களை தட்டி சென்றார். இதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த நடிகர் ,நடிகைகள் என பல பிரபலங்கள் நடிகர் அஜீத்திற்கு பாராட்டு தெரிவித்தனர்.

அடுத்து தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி அடுத்த மாதம் செப்டம்பரில் நடைபெறவுள்ள நிலையில் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் பதக்கம் வெல்லும் முனைப்புடன் துப்பாக்கி சுடுதல் பயிற்சியை தீவிரமாக எடுத்து வருகிறார்.அஜீத்தின் ரசிகர்களும் கண்டிப்பாக தங்கம் வென்று விடுவார் என்று நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

சமீபத்தில் அவர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Independence Day 2021: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News