‘அன்றே கணித்தார் ஆண்டவர்’ ஒடிசா ரயில் விபத்தை அன்பே சிவம் படத்தில் முன்பே கணித்த கமல்!

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து, நாட்டை உலுக்கிய பெரும் சோகமாக மாறிவிட்டது. இதை, அன்பே சிவம் படத்தில் கமல் ஹாசன் கணித்து விட்டதாக கூறி, இணையத்தில் சில செய்திகள் வலம் வருகின்றன.   

Written by - Yuvashree | Last Updated : Jun 5, 2023, 02:43 PM IST
  • சமீபத்தில் கோரமண்டல் எக்ஸ்ப்ரஸ் ரயில், ஒடிசாவில் விபத்துக்குள்ளானது.
  • அன்பே சிவம் படத்திலும் இதே போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது.
  • இதனால் அன்றே கணித்தார் ஆண்டவர் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோஷம் போட்டு வருகின்றனர்.
‘அன்றே கணித்தார் ஆண்டவர்’ ஒடிசா ரயில் விபத்தை அன்பே சிவம் படத்தில் முன்பே கணித்த கமல்! title=

ஒடிசாவில் நடந்த இந்த ரயில் விபத்து இந்திய அளவில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது வரை இதில் 200க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசாங்கமே தெரிவித்துள்ளது. இதைத்தாண்டி பல நூறு பேர் இரத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த சிலர் இந்த விபத்தில் சிக்கியதாகவும், அவர்களில் சிலர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

அன்பே சிவம் படத்தில் வரும் காட்சி..

தற்போது நடந்துள்ள ஒடிசா ரயில் விபத்துக்கும், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு  வெளியான அன்பே சிவம் படத்திற்கும்  மிகப்பெரிய  தொடர்பு உள்ளது.  கடந்த 2003 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கியிருந்த படம், அன்பே சிவம். இந்த படத்தில் ஒரு ரயில் விபத்து காட்சி  அமைந்திருக்கும். இந்த காட்சியிலும் தற்போது நடைப்பெற்றுள்ளது போன்ற கோர விபத்துதான் இடம் பெற்றிருக்கும். படத்தில் வருவது போல, அதே மாநிலத்தில், அதே இடத்தில், அதே கோரமண்டல் இரயில் விபத்துக்குள்ளாகியுள்ளது. படத்தில் காட்டியது போலவே, இதிலும் பல நூறு பேர் உயிரிழந்துள்ளனர். அந்த படத்தில் விபத்து நிகழும் போது மழையை பொருட்படுத்தாது பலர் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி புரிவர். அதே போலவே நிஜத்திலும் பலர், இரத்த தானம் கொடுக்க மருத்துவமனைகளில் குவிந்தனர். 2023ல் நடந்த இந்த விபத்தை, 2003 படத்தில் வெளியான அன்பே சிவம் படத்தில் முன்பே கணித்தது எப்படி என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

மேலும் படிக்க | சாலை விபத்தில் உயிரிழந்த பிரபல மலையாள நடிகர்..மீள முடியா துயரத்தில் ரசிகர்கள்!

சுனாமி-கணிப்பு:

அன்பே சிவம் படத்தில் மாதவனும் கமல் ஹாசனும் ஒரு விடுதியில் தங்கியிருப்பர். அப்போது, கமல் தனது அப்பா குறித்தும் அவர் சுனாமி அலையை புகைப்படம் எடுக்கையில் அலையோடு அலையாக அடித்து சென்றது குறித்தும் கூறுவார். இதையடுத்து, சரியாக ஒரு வருடம் கழித்து 2004ஆம் ஆண்டில் தமிழகத்தை சுனாமி தாக்கியது. மேற்கூறிய இரயில் விபத்தது, மற்றும் சுனாமி ஆகிய இரண்டையும் எப்படி அன்பே சிவம் படத்தில் கூறியிருந்தனர் என்பது புரியாத புதிராக உள்ளது. படம்  வெளிவந்த போது, இதை யாரும் கண்டு கொள்ளவில்லை. தற்போது நடைப்பெற்ற சம்பவங்களை சாட்சியாக வைத்துதான், இந்த படத்தில் ஏதோ இருக்கிறது என ரசிகர்களுக்கு புலப்பட்டுள்ளது.

ஷாருக்கானிற்கு அப்போதே பதான் பட்டம் கொடுத்தவர்…

அன்பே சிவம் படத்தை போலவே அதற்கு முன்னர் வெளியான, ஹேராம் படத்திலும் ஒரு விஷயத்தை கணித்திருப்பார், கமல். ஒரு காட்சியில் தன்னுடன் நடித்திருந்த ஷாருக்கானை பதான் என அழைப்பார். ஆனால், அப்படத்தில் ஷாருக்கானின் பெயர் அம்ஜித் அலி கான். இந்த படம் வெளியாகி சரியாக 23 வருடம் கழித்து பதான் என்ற படத்தில் நடித்திருந்தார் ஷாருக். 

மேலும் சில கணிப்புகள்…

கமல் மட்டுமன்றி, சூர்யாவின் சில படங்களும் நிகழவிருக்கும் விஷயங்களை முன்கூட்டியே கணித்தது. அதில் ஒரு படம்தான், 7ஆம் அறிவு. அப்படத்தில் கொடிய நோய் பரவலால் மக்கள் அனைவரும் இறந்து போவர். அதே பாேல 2019ஆம் ஆண்டு பலருக்கு எமனாக வந்த நோய், கொரோனா. கொரோனா வந்த புதிதில் பலர், “இந்நேரம் சூர்யாவ தண்ணில ஊறப்போட்ருப்பாங்க இல்ல டா..” என மீம்ஸ்களை ஷேர் செய்து வந்தனர். அதே போல காப்பான் படத்தில், வெட்டுக்கிளி படையெடுப்பை காட்சி படுத்தியிருப்பர். இதுமட்டுமின்றி  நடிகர்  விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன்  பண மதிப்பு இழப்பு போன்ற படங்கள்    இப்படி முன்கூட்டியே வரவிருக்கும் ஆபத்துகளை யோசித்த திரைப்படங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. இது போல, படத்தில் காட்டுவது நிஜத்தில் நடப்பதால் இவையெல்லாம் எதேச்சியாக நடக்கின்னவா, இல்லை வேறு ஏதும் காரணமா என்ற ஆராய்ச்சியில் ரசிகர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் படிக்க | அன்று அழகு நடிகை..இன்று அன்பான அம்மா..நடிகை ரம்பா குறித்த குட்டி கதை இதோ..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News