“இது மிகவும் உணர்வுப்பூர்வமான திரைப்படமாக இருக்கும்” சலார் படம் குறித்து பிரபாஸ் பேட்டி!

ஹொம்பாலே பிலிம்ஸ் சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்திற்காக தனது உருமாற்றம் குறித்து மனம் திறந்த  பிரபாஸ்.   

Written by - Yuvashree | Last Updated : Dec 16, 2023, 05:22 PM IST
  • பிரபாஸ் நடிக்கும் படம், சலார்.
  • இதை பிரஷாந்த் நீல் இயக்குகிறார்.
  • இப்படம் குறித்து அவர் பேட்டி கொடுத்துள்ளார்.
“இது மிகவும் உணர்வுப்பூர்வமான திரைப்படமாக இருக்கும்” சலார் படம் குறித்து பிரபாஸ் பேட்டி! title=

ஹொம்பாலே பிலிம்ஸ்,  சந்தேகத்திற்கு இடமின்றி இந்திய திரைப்படத் துறையில் மிகவும் மதிப்புமிக்க திரைப்படங்களை உருவாக்கும் முக்கியமான தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில், பாகுபலி நட்சத்திரம் பிரபாஸ் நடிப்பில் மற்றும் கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் இந்தியாவே எதிர்பார்க்கும் படமாக  சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் பிரமாண்ட வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

சமீபத்திய நேர்காணலில், பான் இந்தியன் ஸ்டார் பிரபாஸ் படம் குறித்துக் கூறுகையில் கதபாத்திரங்களுக்கிடையான உணர்வுப்பூர்வமான போராட்டத்தைச் சொல்லும் உணர்ச்சிகரமான படைப்பாக இப்படம் இருக்கும் மேலும் முதல்முறையாக ரசிகர்கள் படத்தில் ஒரு கதாப்பாத்திரமாக என்னைப் பார்ப்பார்கள் என்றார்."

டிசம்பர் 22, 2023 அன்று படம் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது.  இன்னும் ஒரு வாரமே உள்ளதால், முன்னணி நடிகர் பிரபாஸிடம் சமீபத்திய நேர்காணலில் சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்தின்  கதாபாத்திரத்திர மாற்றத்திற்காக அவரது உழைப்பு உருமாற்றம் மற்றும் அவர் செய்த முன்  தயாரிப்புகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த பிரபாஸ், "நானும் பிரசாந்தும் இப்படத்திற்காக  ஒன்றாக இணைந்தே வேலை செய்தோம், எனக்கு தோன்றிய அனைத்தையும் அவரிடம் சொன்னேன், அவர் நான் என்னனென்ன செய்ய வேண்டும் என்று சொன்னார். படத்திற்கு நான் சரியானது என்று நினைத்த சில உடல் மொழி பற்றி அவரிடம் சொன்னேன். அவரும் கூட நிறைய ஐடியா தந்தார். எந்தவொரு முக்கியமான காட்சிக்கு முன்பும் நாங்கள் விவாதிப்போம், நான் அந்த கதாபாத்திரத்தை அணுகும் விதம் குறித்து, நாங்கள் ஓய்வெடுக்கும்போதும், வேடிக்கையாக, பேசும்போதும் ஒன்றாக விவாதிப்போம் வொர்க்ஷாப் செய்தோம் என்றார். "

அதைத் தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீலுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்துப் பேசிய பிரபாஸ், "என் வாழ்நாளில் 21 வருடங்களில் நான் பணிபுரிந்ததில்  இவர்தான் சிறந்த இயக்குநர். படப்பிடிப்புக்கு எப்போது கூப்பிடுவார் என்ற ஆர்வத்தில் இருந்தேன். செட்டுக்குப் போவதை விட, நடிப்பதை விட, நான் பிரசாந்துடன் நேரத்தை செலவிட விரும்பினேன். இதுதான் என் மனதில் முதலில் தோன்றியது, கடந்த 21 வருடங்களில் இதை நான் உணர்ந்ததில்லை. கடந்த 6 மாதங்களாக இந்த வலியை உணர்ந்தேன். ஒரு மாதத்திற்குள் நாங்கள் மிகவும் நெருக்கமாகிவிட்டோம் என்று நினைக்கிறேன் என்றார்."

மேலும் படிக்க | சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் கிராண்ட் பைனல் நிகழ்ச்சியை நேரில் பார்க்க டிக்கெட் இலவசம்!

பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸிடம் நேர்காணலில் சலாரில் அவரது கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பிற்குச் சென்ற அனுபவம் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரபாஸ், "பிரசாந்த் ஒரு ஹீரோவுக்கான-இயக்குநர், நான் இந்த நேரத்தில் வரலாமா  என்று கேட்டால் அவர் அதற்கேற்றவாறு திட்டமிட்டுவிடுவார். நடிகர்கள் படப்பிடிப்புக்கு வந்தவுடன், குறிப்பாக நான், ஸ்ருதி மற்றும் பிருத்வி போன்றவர்கள் வந்தவுடன்  ஷீட்டிங் ஜெட் வேகத்தில் எந்த தடங்கலும் இல்லாமல் நடக்கும். நாங்கள் இருக்கும் போது எங்கள் காட்சிகளில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள்.இதனால், நான் செட்டில் எப்போதும் காத்திருந்ததில்லை, நாங்கள் அவர்களிடம் பிரஷாந்த், நாங்கள் காத்திருக்கிறோம் என்று சொன்னாலும் அவர் மறுத்துவிடுவார், நான் முதல் ஷெட்யூலுக்கு வந்த போது, எத்தனை மணிக்கு என்று எனக்கு நினைவில் இல்லை. ஆனால் ஹீரோ  எண்ட்ரி ஆகி விட்டார், இனி ஹீரோவின் காட்சிகளை மட்டும் எடுப்போம் என்று சொல்லி எல்லாவற்றையும் நிறுத்திவிட்டார்கள்.அப்போது நான் அவரிடம் சொன்னேன், பரவாயில்லை, என்னுடைய பாதிப் படங்களில் நான்  காத்திருந்திருக்கிறேன் என்றார்.

மேலும், சலார் படத்தில் தனது கதாபாத்திரத்திற்கான மாற்றம் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்ட பிரபாஸ், "நான் சிறப்பாக எதுவும் செய்யவில்லை; பிரசாந்த் கதாபாத்திரம் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று விரும்பினார், அதற்கேற்ப என்னை மாற்றிக்கொண்டேன். இது எனக்கு பொதுவான விஷயம் தான். கடந்த 21 ஆண்டுகளில் நான் செய்த பெரிய மாற்றம் எல்லாம் இல்லை."

மேலும் படிக்க | பிக்பாஸ் 7: இந்த வாரம் எவிக்ட் ஆவது இவர்தான்! எல்லாருக்கும் பிடிச்சவராச்சே..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News